பக்கம்:சரணம் சரணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தும் விளைவும் - 1855

கிறார்கள். அவன் அவற்றை நின்று பார்க்கிருன். அவன் வாயில் நீர் ஊறுகிறது. அவனிடம் கையில் காசு இல்லே. பாவம்! அரை மணி பார்த்தபடியே நின்று விட்டுப் போகிறன். அந்த இனிப்புப் பண்டங்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தால் அழகாக இருக் கிறது. அந்த அழகைப் பார்த்துவிட்டுப் போகுல் போதுமா? பணம் கொடுத்து வாங்கி உட்கொள்வதற்குத் தானே அவற்றை வைத்திருக்கிறார்கள்?

அம்பிகையின் சந்நிதிக்குச் சென்று அவளுடைய அழகிய உருவத்தைக் கண்டு மகிழ்கிருேம். அதோடு. நின்றுவிட்டால் பட்சணக்கடைக்கு வந்த ஏழையைப் போல ஆவோம். அம்பிகையை நாம் உட்கொள்ள வேண்டும்; அப்பெருமாட்டின் திவ்ய ரூபத்தை உள்முக மாகக் கண்டு மகிழ வேண்டும்.

அந்தர்முக ஸ்மாராத்யா பஹிர்முகளில-துர்லபா?? என்று லலிதா சகசிர நாமத்தில் வருகிறது. உள்முகமாகப் பார்க்கிறவர்கள் அம்பிகையின் திருவருளேப் பெறுகி ருர்கள்.

உடம்பால் வழிபட்டு, வாக்கில்ை தோத்திரம் செய்து, விக்கிரங்களை வைத்துப் பூஜை செய்து உபாசன பண் ணுகிற செயல்கள் யாவும் உள்முகமாக அன்னையைத், தரிசிப்பதற்கு வழியாக உதவுபவை. திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையை வலம் வந்து, தரிசித்து, வணங்கி வாழ்த்துவது சரியை என்னும் வழிபாட்டு முறையைச் சார்ந்தது. நாமே பூஜைசெய்வது கிரியை. இந்த இரண்டும் முதல் இரண்டு வகுப்புகளைப் போன்றவை. அவற்றிற்கு மேல் மூன்றவது வகுப்பாக இருப்பது யோகம்; மனத்தால் தியானித்து ஒன்றுபடுவது, அந்த வகுப்புக்குப் பிறகு, ஞானம் என்ற பெரிய வகுப்பு இருக்கிறது. கீழுள்ள மூன்று. வகுப்புக்களிலும் முறையாகத் தேர்ச்சி பெற்றவர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/145&oldid=680521" இலிருந்து மீள்விக்கப்பட்டது