பக்கம்:சரணம் சரணம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயார் குற்ை? - 179

ஆயும் தீர்ப்பவள் அன்னே. நின்று என்பது எழுந்து நிற்பதைக் குறிப்பதன்று; சலனமின்றி, நிலேயாக, ஒன்றையே கடைப் பிடிப்பதைச் சுட்டுவது. யாரையேனும் நம்பி அணுகும் போது அவல்ை உடனே உதவி கிடைக்காவிட்டால் மற்றாெருவனே நோக்கி ஓடுவது மனித இயல்பு. நோய் வந்தால் ஒரு மருத்துவரை அணுகுவதும், சில நாளில் குணம் உண்டாகாவிட்டால் வேறு ஒரு மருத்துவரை நாடு வதும், உறவினர்களும் நண்பர்களும் ஆளுக்கு ஒரு மருத்து வரைப் பற்றிச்சொல்ல, மாறி மாறி அவர்களே நாடுவதும் உலக இயல்பு. எதிலும் விடாப்பிடியாக நின்று முயன்றால் தான் வெற்றி கிடைக்கும். இங்கே, நின்று என்ற சொல் இடைவிடாமல், சலியாமல், கடைப்பிடிப்பதைக் குறிக் கிறது.

‘என் குறையைத் தீர்ப்பவள் நீயே என்ற நம்பிக்கை தளராமல் நின்று, நின் அருளேப் பெறுவதற்கு நின் திருவடியை ஏத்தி முறையிட்டுக் கொள்வதே வழி என்று. அறிந்து, அந்த வழியில் விடாப் பிடியாக நின்று வழி படு கிறேன்? என்று சொல்கிறார்,

அன்பர்களுடைய கடமை, அன்னேயைச் சார்ந்து சரணடைந்து வழிபடுவது. அவர்களுடைய குறைகளேத் தீர்ப்பது அவள் கடமை. -

‘தன்கடன் அடியேனேயும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே?? என்பது அப்பர் திருவாக்கு.

அம்பிகையைச் சரண் புகுந்துவிட்டால் குறைகள் எல்லாம் தீரும்; இந்தப் பிறவியிலேயே சாந்தி உண்டா கும்; ஞானம் சித்திக்கும்; இனிப் பிறவாத தன்மை

அமையும். -

செய்ய வேண்டியதைச் செய்தவர்களுக்கு இனி நற் பயன் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற ஐயமோ அச்சமோ இருப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/189&oldid=680569" இலிருந்து மீள்விக்கப்பட்டது