பக்கம்:சரணம் சரணம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயார் குறை? 181

தொழுவதல்ை குறை தீர்ந்து நிற்கிறேன்; பிறவி இனி வராது என்ற உறுதி பெற்றிருக்கிறேன். பிறந்தாலோ குறை என்னுடையதன்று. என்ைேடு வேறு யாருக்கும் தொடர்பு இல்லேயாகையால் வேறு யாரும் அதற்குக் காரணமாக மாட்டார்கள். தீதான் குறையுடையவளா வாய். என்னேக் காப்பாற்றாத குறை நின்னேயே சாரும்’ என்று உரிமையோடு பேசுகிறார் இந்தப் பேரன்பர். அம்பிகையிடம் உள்ள நெருங்கிய அன்பும் நம்பிக்கையும் இப்படிப் பேச வைக்கின்றன.

இனி யான் பிறக்கின்

நின் குறையே அன்றி யார் குறைகாண்?

இப்படிச் சொன்னவுடன் இந்த அன்பருக்கு ஒர் எண்ணம் தோன்றுகிறது. குறைவிலா நிறைவாகிய என் தாயை இப்படிச் சொல்லிவிட்டேனே! பிறக்கின் என்று தானே சொன்னேன்? பிறக்கமாட்டேன். ஆகவே அவ கருக்குக் குறை உண்டாகாது’ என்று எண்ணியவர், அவளைத் தியானிக்கிறார், அவள் வடிவத்தை உள்ளததே நிறுத்திப் பார்க்கிறார். அவளுக்குக் குறையே இல்லே என்றவர், என் அன்னேக்கு உண்மையில் ஒரு குறைஉண்டு போல் தோன்கிறதே!’ என்று சமட்காரமாகச் சொல்ல வருகிறார். ஆம்; அவளுக்கு இடையே இல்லே. அது குறை அல்லவா? இடைமி கமிக இளேத்திருக்கிறது. மின்னல்தான் மெல்லியது என்றால் அது என்ன மென்மை? அம்பிகையின் இடையை நோக்கில்ை மின்னல் தடித்திருப்பது என்று தோன்றும். மின்னலினும் மிக மெலிந்து இருப்பது அம்பிகையின் இடை ஆதலால் மெலிவை ஆராயும்போது அன்னேயின் இடைக்கு முன் மின்னலுக்கு குறைவே உண் டாகும். அவ்வளவு மெலிவும் நுட்பமும் உடைய இடையை உடையவள் தாய், இதைச் சொல்கிறார் இந்தப் பக்தர்.

இரு நீள் விசும்பின் மின் குறை காட்டி மெலிகின்ற

நேரிடை மெல்லியலாய்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/191&oldid=680572" இலிருந்து மீள்விக்கப்பட்டது