பக்கம்:சரணம் சரணம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் இயல்பு 193

லட்சியமாக உடையவர்களாதலின் அடியார் என்ற பெயர் வந்தது.

பதமுக்தி, பரமுக்தி என்று இரண்டு வகை முக்திகள் உண்டு. பதமுக்தி என்பது இந்திரபதவி முதலியவற்றைக் குறிப்பது. நாம் செய்யும் புண்ணியங்களுக்கு ஏற்ப அவை கிடைக்கும். ஆல்ை அவை யாவும் ஒரு காலத்தில் அழியும் தன்மையை உடையவை. பரமுக்தி என்பது முடிவான விடுதலையைப் பெறும் பேரின்ப வாழ்வு. அதைப் பெற்ற வர்கள் என்றும் மாருத இன் பத்தில் ஈடுபட்டிருப்பார்கள், அதையே வீடு என்று தமிழில் சொல்வார்கள்.

பதவிகளில் இருக்கும் இந்திராதி தேவர்கள் தம்மு டைய பதவிகள் நிலப்பதற்காக அம்பிகையைப் புகழ்ந்து வழிபடுவார்கள். அவர்களுடைய பதவிக்கெல்லாம் ஆதார மாக இருப்பது அம்பிகையின் திருவருள். அந்தத் திருவருளே நாடும் அடியவர்கள் அம்பிகையின் திருவடியாகிய பர முக்திக்குக் குறைவான எதையும் விரும்பமாட்டார்கள். அவள் திருவடியையே தசம் பெறவேண்டிய பயணுகக் கொண்டவர்கள், அவளைத் துதித்து அவளால் நிலேபெறுத் திக் கொள்ளும் பதவிகளை உடையவர் கண் உயர்ந்தவர் களாக எண்ணமாட்டார்கள்; அவர்கள் பதவியையும் விழையமாட்டார்கள்.

‘கொள்ளேன் புரந்ததன் மால்அயன் வாழ்வு: என்பது திருவாசகம். . - -

அடியார்களுக்கு அபிராமவல்லி எல்லாரினும் உயர்ந் தவள் என்பது தெரியும். அவள் அருள் எல்லாவற்றினும் மேலான இன்பத்தைத் தரும் என்பதையும் அறிவார்கள். அவள் திருவடியாகிய முக்தி எல்லோருடைய பதவிகளுக் கும் மேலான தென்பதும், அழியாத வீடு என்பதும் அவர் கன் தெளிவாக அறிந்தவை. _ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/203&oldid=680585" இலிருந்து மீள்விக்கப்பட்டது