பக்கம்:சரணம் சரணம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H96 சதன ம் சரணம்:

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும்

நாரணனும் அயனும் பரவும் அபிராமவல்லி

அடியிணையைப் பயன் என்று கொண்டவர். அத்தகையவர்கள் மேலே சொன்னவர்காேவிடத் தாழ்ந்தவனுகிய இந்திரனுடைய பதவியையா விரும்பு வார்கள்? அவர்களுக்கு அது மிகவும் துச்சமானது. இதைச் சொல்ல வருகிறார் ஆசிரியர்.

இந்திர பதவி எத்தகையது?

இந்திரன் தேவலோகத்துக்கு அதிபதி. அது பொன்னு: கைம். எங்கும் தங்கமயமாக இருக்கும். கற்ப கவனம் அங்கே இருக்கிறது. அந்த மரங்களும் பொன்னிறம். பெற்றவை. அவன் படுக்கும் பாயல் கற்பகக் காட்டின் கத்தியில் இருப்பது. அதுவும் தங்கமயமானது. தேவ. லோகத்தில் உள்ள அரம்பை முதலிய மகளிர் நடனமாடக் கண்டும் பாடக் கேட்டும் இன்புற்று வாழ்பவன் இந்திரன், அவர்களோடு பொன்மயமாயன பாயலில் இன்புறுவன் அவன்.

இந்திரன் தேவலோக மகளிரின் ஆடல் பாடல்களில் ஈடுபட்டுக் களிப்பதைத் திருவிளையாடற்புராண ஆசிரியர் பின்வருமாறு வருணிக்கிறார்:

‘முன்னதாம் முகத்தில் வண்டு

மூசுமந் தார நீழல் பொன்னவிர் சுணங்குண் கொங்கைப்

புலோமசை மணுளன் பொற் ஆண் மின்னவிர்ந் திமைப்பச் சிங்கம்

சுமந்தமெல் ல8ணமேல் மேவி அன்னமென்னடையார் ஆடும்

ஆடல்மேல் ஆர்வம் வைத்தான்.?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/206&oldid=680588" இலிருந்து மீள்விக்கப்பட்டது