பக்கம்:சரணம் சரணம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய தவம்

அம்பிகையின் திருவடிக்கு அன்பு செய்பவர்கள் இன்ன அடையாளங்களுடன் இருப்பார்கள் என்று சொன்ன அபிராமிபட்டர், உடனே தேவியைத் தியானிக் கப் புகுகிறார், அன்பர்கள் தம்முடைய வழிபடு கடவுள ரைப் பாடும்போது இடையிடையே உலகத்தாருக்கு உப தேசம் செய்வார்கள்; உலகினர் போக்கை எண்ணி இரங்கு வார்கள்; தம்மையே இழித்துப் பேசிக் கொள்வார்கள். இப்படிச் சொல்லிக்கொண்டே வரும்போது இறைவனு டைய திருவுருவ வருணனை வரும். அப்போது, அவர்களு டைய உள்ளம் இறைவனைத் தியானித்து அவனுடைய திருவுருவத்தைப் பதித்துக் கொள்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

‘எதை எதையோ பேசுகிருேமே! அன்னேயின் திருவுருவத்தைத் தியானித்தாலும் இன்பம் உண்டு என்று எண்ணி இடையிடையே அம்பிகையின் திருவுருவ வருணனையில் ஈடுபடுவார் அபிராமிப்ட்டர். அத்தகைய பாடல்களே நாம் பாடும்போது நாமும் அந்த உருவத்தை மனக் கண்ணிலே நிறுத்திப் பழகவேண்டும். -

அருளாளர்களின் திருவாக்கில் நம்முடைய மனம் நன்கு பதியும் பாங்கு இருக்கும். ஆகவே தனியே நாமாக இறைவியைத் தியானம் பண்ணுவதைவிட இத்தகைய பாடல்களில் மனத்தை ஈடுபடுத்தி இவற்றில் வரும் திரு வுருவ வருணனையைப் பாவனே மூலமாக உள்ளத்திலே எழுதிப் பழகுவது நலம். ஒரு மந்திரத்தை ஜபிக்கும்முன் அந்த மந்திர தேவதையின் தியான சுலோகத்தைச் சொல்லுவது வழக்கம். அந்தச் சுலோகத்தில் மூர்த்தியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/23&oldid=680599" இலிருந்து மீள்விக்கப்பட்டது