பக்கம்:சரணம் சரணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 சரணம் சரணங்

திரிபுரை பாதங்கள் சேர்மீன்களே என்று வழிகாட்டுகிறார் ஆசிரியர்.

வாதங்களேப் புகலாக அடைந்து அவற்றையே இடை விடாது தியானம் செய்தால் முன்னே சொன்ன இழிநிஜ வராதாம். சேர்தல்-இடைவிடாது நினைத்தல்; மலர் மிசை ஏகினுன் மாணடி சேர்ந்தார்’ (குறள்) என்பதற்கும் பரிமேலழகர் வகுத்த உரையில், சேர்தல் என்பதற்கு இவ்வாறே பொருள் உரைத்தார். -

இல்லாமை சொல்லி ஒருவர்தம்

பாற்சென்று இழிவுபட்டு நில்லாம்ை நெஞ்சில் நினேகுவி

ரேல்நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர்தம் பால்ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. (மக்களே, ஒரு செல்வரிடத்தில் போய் உங்களுடைய வறுமை நிலையைச் சொல்லி அவரால் அவமானப்பட்டு நில்லாத நிலை வேண்டுமென்று நெஞ்சில் கருதுவீர்களா ஒல், தினந்தோறும் உயர்ந்த தவத்தைப் பயிலாமையைக் கற்ற இழிகுணத்தவரிடம் ஒரு பொழுதும் செல்லாத நிலையை என்பால் வைத்தருளிய திரிபுரசுந்தரியின் திருவடி களைப் புகலாக அடைவீர்களாக. -

இல்லாமை-பொருள் இல்லாத வறுமை: இன்மை என்று வறுமையைக் கூறுவது மரபு; இன்மை என ஒரு பாவி’ (திருக்குறள்). நித்தம் கற்ற என்று கூட்டியும் பொருள் செய்யலாம்.)

அம்பிகையைத் தியானித்தால் வறுமை தீரும் என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/36&oldid=680613" இலிருந்து மீள்விக்கப்பட்டது