பக்கம்:சரணம் சரணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சரண ம் சரணம்

துக் காரியசித்தி ஆகாதவர்கள் குறைப்பட்டுக் கொள் கிறது போல அவர்கள் பேச்சு இருக்கிறது. அவர்கள் செய்கின்ற பூஜையாலும் வைக்கும் நிவேதனங்களாலும் செய்யும் அலங்காரங்களாலும் கடவுளுக்குப் புதியதாக ஒரு சிறப்பும் வரப்போவதில்லே. தெய்வத்தை ஆராதனை செய்யாவிட்டால் அத்தெய்வத்திற்கு வரும் இழுக்கு, ஏதும்இல்லே.

கங்கையில் நீராடுவதால் கங்கைக்கு என்ன லாபம்? நீராடுகிறவர்களுக்கே தூய்மை உண்டாகிறது; அழுக்குப் போகிறது. ஒருவரும் நீராடாமல் இருந்துவிட்டால் கங்கை வற்றிவிடுமா? அம்பிகை நம்முடைய வாழ்த்தையும். வழிபாட்டையும் பெற்று மகிழ்கிருள். நம் குழந்தைகள் நல்லவர்கள் என்று திருவுள்ளம் பூரிக்கிருள். ஆல்ை இந்த வழிபாட்டில்ை அவளுக்குப் புதிய சிறப்பு ஒன்றும் வரப் போவதில்லை. வழிபடாவிட்டால், இருக்கும் சிறப்புப் போவதில்லே.

உலகத்தில் உள்ள அரசர்களுக்குக் குடிமக்கள் வரி செலுத்தாவிட்டால் அவர்களுடைய கருவூலம் வறிதாகி விடும்; அவர்கள் செலவுக்குப் பணம் கிடைக்காது; அதனல் அல்லற்படுவார்கள். குடிமக்கள் ஒழுங்காக வரிசெலுத் தில்ை அரசர் வாழ்வு நன்றாக அமையும். ஆகவே, குடிமக்க ளிைடம் அன்பாகப் பழகி அவர்கள் குறைவின்றி வரியைச் செலுத்தும்படி செய்யவேண்டியது அரசர்களுக்கு இன்றி யமையாதது. * -

அம்பிகையின் நிலே அத்தகையது அன்று. அவள் இயல் பாகவே கருணையுடையாள். அவளுடைய செல்வமாகிய அருளுக்கு லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லே. சென்று. அடையாத திருவுடையானே’ என்று சிவபெருமான ஞானசம்பந்தர் பாடுவார். இறைவனுடைய செல்வம் போவது, வருவது ஆகிய இரண்டும் இல்லாதது; வரவு. செலவு, லாப நஷ்டம். குறைவு பெருக்கம் இல்லாதது, அம்பிகையின் அருட் செல்வமும் அத்தகையதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/42&oldid=680620" இலிருந்து மீள்விக்கப்பட்டது