பக்கம்:சரணம் சரணம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சரணம் சரணம்:

கச்சியப்ப சிவசாரியார், அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்?* என்று கூறுவர். இவ்வாறு பலவடிவிலும் வகையிலும் விரிந்து விளங்கும் எம்பெருமாட்டி, உலகமே தன்னுடைய உருவாக எங்கும் வியாபித்திருக்கிருள். அதல்ை அவளுக்கு, விச்வரூபா (256) என்றும், வ்யாபிநீ (400) என்றும் திரு. நாமங்கள் எழுந்தன. உலகமே அம்பிகையின் வடிவமா தலின் ‘ஸர்வம் சக்திமயம் ஜகத்’ என்று கூறுவர். உலக மெங்கும் அந்தர்யாமியாய் நிற்பதால் ஸ்ர்வாந்தர்யாமினி (819) என்ற பெயரையும் அவள் தாங்குகிருள். இப்படி உலகெங்கும் பரந்திருந்தாலும் அன்னே இவற்றுக்கெல் லாம் அதீதப் பொருளாய் விளங்குகிருள். அதனல் விச்வாதிகா (384). லோகாதீதா (960), ஸர்வாதிதா (962), என்ற திருப்பெயர்கள் அமைந்தன.

கடவுள் என்ற தெய்வத்தைக் குறிக்கும் சொல் இந்த இரண்டு இயல்பையும் புலப்படுத்துகிறது. எல்லாவற்றை யும் கடந்து நிற்பது, எல்லாப் பொருள்களின் உள்ளும் இருப்பது ஆதலின், கடஉள் என்ற இரண்டும் இணைந்து கடவுள் ஆயின. ஸர்வாந்தர்யாமியாய் உள்ளும், ஸர்வ வியாபகய்ை வெளியும் இருப்பவன் என்பதைக் கடவுள் என்ற பெயர் குறிக்கிறது.

‘இயன்ற எல்லாம் பயின்று அகத்தடக்கிய

வேத முதல்வன்? - - என்று சங்க நூலாகிய நற்றிணேயில் இந்தக் கருத்து அமைந்து கிடக்கிறது. இந்த இரண்டு தன்மையையும் ஒருங்கே உடையவள் அபிராமியம்பிகை என்று அடுத்தே. சொல்கிறார் அபிராமி பட்டர். - - . . .

இவ்வுலகு எங்குமாய் நின்றாள்; அனைத்தையும் நீங்கி நிற்பாள். அவளுடைய ஏகத்வத்தையும், கருணையால் பஹுரூபை யாக இருத்தலேயும், வியாபகத்தையும், அந்தர்யாமித்வத் தையும் சொன்னது ஏன்? அன்னேயின் பெருமையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/46&oldid=680624" இலிருந்து மீள்விக்கப்பட்டது