பக்கம்:சரணம் சரணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் எளிமை 37

எடுத்துக் காட்டுவதற்காக. அவளுடைய கருனேயை, தமக்கு அருளும் எளிமையை, ஸெளலப்யத்தைச் சொல்ல வருகிறவர் அன்னேயின் சிறப்பையெல்லாம் முன்னே சொன்னர். ‘எனக்கு எளிவந்து அருள்கிறவள்’ என்று மட்டும் சொன்னல் அந்த ஸ்ெளலப்யத்தின் பெருமை அபுலப்படாது.

பெரிய காரில் போகிற செல்வச் சீமான் ஒருவன் நெடுஞ்சாலேயில் போவது வழக்கம். அவனுடைய இளம் பிராயத்து நண்பன் ஒருவன் ஏழையாக ஏதோ ஒரு சிறு சந்தில் ஒருகுடிசையில் குடியிருக்கிருன். செல்வனே பிறந்த ஊரை விட்டுப் பெரிய நகரத்தில் வாழ்கிருன். ஒரு நாள் பிறந்த ஊருக்கு வந்தபோது தன்னுடைய பழைய நண்பனேப் பார்க்கப் போகிருன். அந்த ஏழை வாழும் சந்துக்குள் அவனுடைய கார் செல்லாது. ஆகவே சாலேயில் காரை நிறுத்திவிட்டுச் சந்திலே நடந்து சென்று நண்ப துடைய குடிசைக்குள் குனிந்து புகுந்து பார்க்கிருன். வேறு ஒர் ஏழை நண்பன் அந்தச் சந்திலே வந்து அவனேப் பார்ப்பது பெரிய காரியம் அன்று. நகரத்தில் வாழ் கிறவன், பெரிய காரில் அகலமான சாலேயில் போகிறவன், சிறிய ஊரில் சிறிய சந்தில் நடந்து சென்று சிறிய குடிசை கயில் நுழைந்து பழைய நண்பனிடம் தன் அன்பைக் காட்டினன் என்றால், அதுதான் வியக்கத்தக்க செயல். அதுதான் பெருங்கருணேயைக் காட்டும் செய்கை. அம்பிகை அதைவிடப் பெரிய கருணை உடையவள். உலகம் எங்குமாய் விரிந்த விரிவாக உள்ள அன்னே பக்தர் களின் சித்தத்துக்குள் விருப்பத்தோடு எழுந்தருளி நிலே :யாக நிற்கிருள். பக்தர்களின் சித்தமாகிய மயில்களேக் களிக்கச் செய்யும் மேகம் என்றும், பக்தர்கள் உள்ளப் ஆம்பொய்கையில் உலவும் அன்னமென்றும், லலிதா -சகசிரநாமம் அன்னேயை வருணிக்கிறது. பக்த சித்த கேகி கநாகநா (74) என்றும், பக்த மானஸ் ஹம்ஸிகா (372) என்றும் வரும் திருநாமங்களே நினைத்துப் பார்த்தால் இந்த இயல்பு தெரியவரும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/47&oldid=680625" இலிருந்து மீள்விக்கப்பட்டது