பக்கம்:சரணம் சரணம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் எளிமை 39

வீட்டில் அதே சம்பளம் வாங்கும் மற்ளுெருவர் இருக். கிறார். இருவருடைய குடும்பமும் கலந்து பழகின. அந்த இருவருக்குள் ஒருவருக்குப் பத்து ரூபாய் சம்பளம் அதிக மாகிவிட்டது. அவர் அடுத்த வீட்டாரோடு முன்போலப். பழகமாட்டார். அதுகூட வியப்பன்று. அவருடைய மனேவி அடுத்த வீட்டுக்காரர் மனேவியோடு பழையபடி பேச மாட்டாள்; சிறிது தலையெடுப்பாகவே இருப்பாள். இது உலக இயல்பு. - ‘முந்திரிமேல் காணி மிகுவதேல் கீழ்தன்னே

இந்திரன எண்ணி விடும்?? - என்று நாலடியார் கூறுகிறது. இத்தகைய உலகியலிலே பழகுகிற நமக்கு, ஸர்வேசுவரியாக விளங்கும் அன்னே ஒரு, மனிதனுடைய உள்ளத்தில் வந்து நடம் புரிகிருள். எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிருள் என்றால் எளிதிலே, நம்பிக்கை உண்டாகாது. பக்தருடைய உள்ளத்தை. விண்டு பார்க்க முடியுமா? அல்லது அவர்தாம் தம் நெஞ்சைப் பிளந்து காட்ட முடியுமா? முடியவே முடியாது.

பின்னே, அபிராமிபட்டர் கூறுகிருரே; அது உண் மையா, பொய்யா? அவருக்கு அவர் மனம் சாட்சி. நமக்கு. யார் சாட்சி? அவர் இரண்டு பெரியவர்களேச் சாட்சிக்கு. அழைக்கிறர். ஆல்ை அந்தச் சாட்சிகளே நாம் காணவும் முடியாது; கேட்கவும் முடியாது. “உங்களால் முடிந்தால் அந்தப் பெரியவர்களிடம் போய்க் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்குத்தான் இந்த இரகசியம் தெரியும்; அவர்கள் சொல்வார்கள்!’ என்று கூறுவாரைப் போல இந்த அநுபூதிமான் சொல்கிறார். ‘எனக்கு அம்பிகை அருள் செய்வது என்ன விய்ப்பு! என் உள்ளத்திலே நின்று. திருவிளேயாடல் புரிவது என்ன ஆச்சிரியம்! அத்த ஆச்சரிய மான இரகசியத்தை இரண்டு பேர்களே அறிவார்கள். அந்தப் பரதேவதையை உபாசித்துத் தம்முடைய உள்ளத்தை அவளுக்குச் சிங்காதனமாகக் கொடுத்த, வர்கள் அந்த இருவர்களும். அவர்களுக்குத்தான் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/49&oldid=680627" இலிருந்து மீள்விக்கப்பட்டது