பக்கம்:சரணம் சரணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறப் பெருஞ் செல்வி 47

இதை அருணகிரி நாதரும் திருப்புகழில் பாடுகிறார்,

அபிராமி எக்குலங்குடி லோடுல கியாவையும் இற்பதிந்திரு நாழிநெ லால் அறம்

எப்பொதும் பகிர்வாள்??

‘இருநாழி படி கொடறங்காத்த மாபரைச்சி’

(திருப்புகழ்)

LTcm என்பது பரதேவதை என்ற பொரு :ளுடையது. பரா, பராம்பிகா, பராசக்தி என்று கூறும் பெயர்களைப் போன்றது. அது.

இவ்வாறு உலகுயிர்களாகிய குடும்பத்தில் தாயாகி அவ்வுயிர்கள் உய்ய எல்லா அறங்களேயும் செய்யும் அம்பிகையைத் தர்மவர்த்தனி (959) என்று லலிதாசகசிர நாமம் கூறுகிறது. திருவையாற்றில் தர்மசம்வர்த்தனி என்றும், அறம் வளர்த்த நாயகி என்றும் திருநாமம் கொண்டு அம்பிகை எழுந்தருளியிருக்கிருள். அறப்பெருஞ் செல்வி என்று புலவர்கள் பாடுவார்கள். -

இத்தகைய பெருமாட்டியின் அருளால் கிடைக்காத பொருள் ஒன்றும் இல்லை. அம்பிகையைப் போற்றில்ை பிறகு வேறு யாரையும் போய்ப் போற்றி வேண்டுவதற் குரிய பொருள் ஏதும் இல்லே. இதனே அறிந்தும், புலவர்கள் செல்வர்களைத் தேடிச் சென்று, அவர்களிடம் இருக்கும் பண்பு சிறிதளவாயினும் அதற்கு மேல் பல பண்புகளைக் கூட்டிப் பொய்யும் மெய்யும் கலந்து பாடுகிறர்கள். இந்த திலேயை அருளாளர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்

சார்பி னுந்தொண்டர்த் தருகிலாப்

பொய்ம்மை யாளரைப் பாடர்தே எந்தை

புகலூர் பாடுமின் புலவீர்காள்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/57&oldid=680636" இலிருந்து மீள்விக்கப்பட்டது