பக்கம்:சரணம் சரணம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - சரணம் சரணம்

இம்மையே தரும் சோறும் கூறையும்;

ஏத்த லாம்இடர் கெடலுமாம்; அம்மை யேசிவலோகம் ஆள்வதற்

கியாதும் ஐயுற வில்லையே?? என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகிரு.ர். இப்படியே. ஆழ்வார்களும் அருணகிரிநாதரும் பாடியிருக்கிறார்கள். - அபிராமி பட்டரும் இந்தக் கருத்தைச் சொல்கிரு.ர். ஆனல் அவர் பிறருக்கு உபதேசம் செய்யும் வகையில் அதைச் சொல்லாமல், தாமே அப்படிச் செய்வதாக அந்தக் குற்றத்தைத் தம்மேல் ஏற்றிக்கொண்டு சொல் கிறார். இது பெரியோர்களுக்கு இயல்பு. தாம் செய்யாத குற்றங்களேயும் தாம் செய்ததாகக் கூறி இரங்குவார்கள். இதை நைச்சியானுசந்தானம் என்பர். அபிராமிபட்டர் அத்தகைய பணிவு நிலையிலிருந்து, “எல்லா அறங்களையும் செய்த உன்னேயும் போற்றி வேறு யார் யாரிடமோ போய்த் தமிழ்ப் பாட்டுப் பாடிப் பொய்யும் மெய்யும் புகலும்படி வைத்தாயே! இது நின் அருளுக்கு அழகா குமா?’ என்று கேட்கிறார். இனி அவர் பாட்டைப் பார்க்கலாம். -

முதலில், இரண்டுபடி நெல்கொண்டு உலகமெல்லாம். உய்ய அறம் செய்தாள் அம்பிகை என்பதைச் சொல் கிறார்.

ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு

அண்டம் எல்லாம - உய்ய அறம் செய்யும் உன்னேயும் போற்றி. (பரமேசுவரகிைய என் தந்தை அளந்து தந்த, வண்ணம் இரண்டு படி நெல்லேக் கொண்டு உலகத்திலுள்ள உயிர் களெல்லாம் வாழும்படி அறத்தைச் செய்யும் உன்னேயும் பாக்களால் புகழ்ந்து.

‘எம் ஐயனுமே” என்று முன் பாட்டில் சிவபிரானக் குறித்தார். ஐயன்-தந்தை, அளந்தபடி அளந்துகொடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/58&oldid=680637" இலிருந்து மீள்விக்கப்பட்டது