பக்கம்:சரணம் சரணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலான புகலிடம்

தாமரை விரிவானது; தண்மையானது; மென்மை யானது; மணம் உடையது; தேன் ஊறுவது; பல இதழ்களே உடையது. அன்பர்களின் உள்ளமும் விரிவுடையது;. குறுகிய பான்மையை விட்டு அகண்டாகார விருத்தியில் ஈடுபடுவது; அன்பு என்னும் குளிர்ச்சியை உடையது; அன்புக்கே ஈரம் என்று ஒரு பெயர் உண்டு. இன்சொலால் ஈரம்அளே இ?’ என்பது குறள். மலரில் ஈரம் இருப்பதுபோல அன்பர்களின் மனத்தில் அன்பு என்னும் ஈரம் இருக்கிறது. உணர்ச்சி மிக்கதாதலின் மென்மையாக இருக்கிறது. எந்த நிகழ்ச்சியான லும் அன்னேயை நினேந்து உணர்ச்சி வசப்படுவது அன்பர்களின் உள்ளம். இதுவே அதன் மென்மை. சத்துவ குணமே மணமாக உடையது. அருள் என்னும் தேன் ஊறுவது. அம்பிகையின் திருவுருவத் தியானத்தைப் பல பல கூறுகளாகச் செய்யும் பகுதிகளே இதழ்களாக உடையது. ஆகவே பக்தர்களுடைய திருவுள்ளம் அம்பிகை எழுந்தருளுவதற்கு ஏற்ற அழகிய தாமரைபோல இருக்கிறது. அதனல், என் சித்தாம்புயத். தும் அமர்ந்திருக்கும்’ என்றார்,

ஆயிர இதழ்த் தாமரை முதலிய இடங்களில் விற்றி ருக்கும் அம்பிகை எளியேனுடைய சித்தமென்னும் தாமரையிலும் எழுந்தருளியிருக்கிருள்” என்ற தல்ை அப் பெருமாட்டியின் கருணையையும் ஸெளலப்யத்தையும். நினைக்கிறார், *

அந்தப் பெருமாட்டியை,

தருணும்புய முலேத் தையல் நல்லாள்

என்கிறார், தருணம்-இளமை. தருணும்புயமென்பது தாமரை மொட்டைக் குறித்தது. அம்பிகையின் நகில்கள் தாமரை மொட்டைப்போல இருக்கின்றனவாம். எல்லா உலகத்தையும் ஈன்றும் எம்பெருமாட்டி கன்னிகையாகவே. இருக்கிருள் என்பதை இவ்வருணனே காட்டுகிறது. தாமரை யரும்பு போன்ற நகில்களேயும் இளமையையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/65&oldid=680645" இலிருந்து மீள்விக்கப்பட்டது