பக்கம்:சரணம் சரணம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 சரணம் சரணம்

உடைய பெண்மணியாகக் கோலம் கொண்டு விளங்கு .கிருள் அன்ன. -

தையல் என்பது பாலாம்பிகை என்று சொன்னபடி, போலா என்பதே இறைவியின் நாமங்களில் ஒன்று. புள்ளி ருக்கு வேளுர் என்ற தலத்தில் எழுந்தருளிருக்கும் அம்பி கைக்குத் தையல்நாயகி என்று தமிழிலும், பாலாம்பிகை என்று வடமொழியிலும் திருநாமம் அமைந்திருக்கிறது. அதல்ை தையல் என்பது இளமையையுடையவள் என்ற பொருளையுடையது என்பது தெளிவாகும். பாலாம்பிகை யாகிய நல்லாள் என்றார். தையல் என்பதற்கு அலங் காரத்தையுடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். “தைஇ’ என்ற சொல்லுக்கு அணி செய்துகொண்டு என்று பொருள் உரைப்பதல்ை, தையல் என்பதற்கு அலங்காரம் செய்து கொண்டவள் என்று பொருள் கொள்வதும் பொருந்தும், -

தமக்கு நன்மையே செய்யும் பெருமாட்டியாதலின் “நல்லாள்” என்றார். இவ்வாறு இரண்டு அம்புயங்களில் எழுந்தருளி, இரண்டு தருணும்புயங்களைத் திருமார்பில் கொண்ட அம்பிகையின் அங்கங்களாகிய வேறு அம்புயங் களே இனித் தியானிக்கிரு.ர். -

அபிராமிபட்டர் மேலிருந்து கீழே அன்னேயின் திரு வுருவத்தைத் தியானம் செய்கிறார். அன்னையின் திருவிழி கள் அம்புயம் போல இருக்கின்றன. தேன் வழியும் தாமரையைப் போல அந்த விழிகளில் கருணை வழிகின்றது; அழகு பொங்குகிறது. பிறர் தரிசிக்கும்போது அழகு பொழியும் அம்புயங்கள் அவை. தகை என்பது அழகு என்னும் பொருள் உடையது. அன்னேயின் திருவிழிகள் தகைசேர் நயனம்; கருணும்புயம்; அழகும் கருணையும் ஒருங்கே உடையவை. பத்மநயன= (247) என்பது அம்பி கையின் திருநாமங்களில் ஒன்று. .

தகை சேர் நயனக் கருணும்புயமும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/66&oldid=680646" இலிருந்து மீள்விக்கப்பட்டது