பக்கம்:சரணம் சரணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சரணம் சரணம்

பராம்பிகை எல்லாவற்றிலும் உயர்ந்த பொருள். அவளை அணுகுவதற்கு முடியாமல் வேதங்கள் ஏங்கியிருக் கின்றன. ஆகையால் அவை கீழே நிற்கின்றன என்று சொல்கிறார், வேதங்களின் ஒலியை வேதகானம் என்று சொல்வது வழக்கம். அவைகள் பாடுகின்றனவாம். நம் மைத் தெரிந்து கொள்ளாமல் இத்தனை காலம் பாடு கின்றனவே! என்ற கருணையில்ை அன்னே அந்த வேதங் களேயே படியாகக் கொண்டு அவற்றின்மேல் திருவடியை வைத்து இறங்கி வருகிருள்.

மற்றாெரு வகையாகவும் சொல்லலாம். எம்பெரு மாட்டி நான்கு வகையான பிரணவ பீடங்களில் எழுந் தருளுகிருள். அவை ஸ்தூலப் பிரணவ பீடம், சூட்சுமப் பிரணவ பீடம், காரணப் பிரணவ பீடம், மகா காரணப் பிரணவ பீடம் என்பன. வேதங்கனாலே பாடப்படுகின்ற சிறந்த பீடங்களாகிய இந்த நான்கிலும் அம்பிகை திருவடியை வைத்து நிற்கிருள்.

கொன்றை மலர் நிறைந்த தூய சிவபெருமானுடைய சடையின்மேல் நிற்கும் திருவடிகள், மிகச் சிறந்த வேத பிடத்தில் எழுந்தருளும் திருவடிகள். இப்போது அடியே னுடைய தலையில் எழுந்தருளியிருக்கின்றன என்கிறார்.

அந்தத் தகல் எத்தகையது? அது முடை நாற்றம்

உடையது, நாய்த்தலை போன்றது, தூய்மை இல்லாமல்

கண்ட கண்ட பொருளை ஏற்றுக் கொண்டு நிற்பது என்ற

எண்ணத்துடன், -

முடை நாய்த் தலையே

என்கிரு.ர். கொன்றை வார்சடையைப் பீடமாகக்

கொண்டு நின்ற பின்பு, வேதங்களைப் பிடமாக் கொண்டு

நின்ற திருவடி. பின்னும் தூயதாகிய பீடத்தில் இருக்க வேண்டும். அப்படியின்றிக் கீழ் இறங்கி வந்து நாய்த்தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/84&oldid=680666" இலிருந்து மீள்விக்கப்பட்டது