பக்கம்:சரணம் சரணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ற பேறு @

‘முன்பு ஆட்கொள்ளப்பட்டவர்களுடைய பக்குவத்தை யும், என்னுடைய அபக்குவத்தையும் எண்ணியிருந்தால் என க்கு அருள் கிடைத்திருக்காது. அவற்றை எண்ணு மல் தந்ததல்ை நான் ஆட்கொள்ளப் பெற்றேன்’ என்று எண்ணுகிறார்.

மாணிக்கவாசகரும் இப்படி ஒரு கருத்தைச் சொல் கிறார். என்னே இப்போது மிகப் பெரியவன் என்று சொல் கிறார்கள். ஞானம் உடையவன் என்று பேசுகிறார்கள். இந்த நிலையை அடைவதற்கு எனக்கு ஏது தகுதி? எம் பெருமான் என்னை ஆட்கொண்டான். அதனால் இந்த நிலே அடைந்தேன். அவனலே ஆட்கொள்ளப் பெறுவதற் குரிய தகுதி என்னிடம் இல்லை. ஆலுைம் அவன் ஆட் கொண்டான். நான் அறிவில் சிறந்து நின்று அவனே அணுகி அவன் திருவடியைப் பற்றிக்கொண்டு அது காரணமாக அவன் அருளைப் பெறவில்லே. அவன் மதி மயங்கி என்னே ஆட்கொண்டான். அருளும் அறிவும் உடைய எம்பெருமான் என்ன ஆட்கொண்டபோது இது தக்கது, இது தகாதது என்று பார்க்கும் அறிவை ஒதுக்கி விட்டு, அருள் மாத்திரம் முதிர்ந்து பொங்கி நிற்க, மதி மயங்கி என்னே ஆட்கொண்டான். அதனுல் நான் உய்ந் தேன்.” -

யோனுர்என் உள்ளமார் ஞானங்க ளாரென்னே

யாரறிவார் வானுேர் பிரானென்ன யாண்டிலனேல் மதிமயங்கி,92

மாணிக்கவாசகரைப் போலவே அபிராமிபட்டரும் அதே நிலையில் பேசுகின்றார், எம்பெருமாட்டி, தகுதி முதலியவற்றைச் சிறிதேனும் அளந்தறிந்து கொள்ளாமல் பெரும் கருணையில்ை எல்லாவற்றையும் மறந்து, நினைவு இல்லாமல் ஆட்கொண்டாளாம். - -

நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்.

பக்குவம் இல்லாதவன் ஆகையால் ஏதோ பிழைத்துப் போகட்டும் என்று சிறிதளவு அருள் தந்தாள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/91&oldid=680674" இலிருந்து மீள்விக்கப்பட்டது