பக்கம்:சரணம் சரணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ற பேறு - 83

தகுதியில்லாமல் இவ்வாறு ஆட்கொள்ளப்பெற்ற தகைமைக்குக் காரணம் என்ன? அதை நினைந்து பார்க். கிறார், ஒரு காரணம் புலகிைறது. எம்பெருமாட்டிஎல்லா உயிர்களுக்கும் மாதாவாக இருக்கிருள். லலிதா சகசிரநாமம் பராசக்தியின் தாய்த் தன்மையைப் பலபடி யாகப் பேசுகின்றது. எடுத்தவுடன், பூநீமாதா என்று. தொடங்குகிறது. அதன் பின்பு அம்பிகா, ஆப்பிரம்ம கிட ஜனனி’, ‘அம்பா என்று வெவ்வேறு வகையில் தாயாகப் போற்றுகிறது. எறும்பு முதல் யானை வரைக்கும் உள்ள உயிர்களுக்கும் மனிதன் முதல் இந்திரன் வரை உள்ள உயிர்களுக்கும் அவள் தாயாக விளங்குகிருள். அந்த வகையில் அவளே இவருக்கும் தாய். இவர், தாம். அவளுக்கு மகன் என்ற உணர்வு பெருவிட்டாலும் தாய்க்கு இவன் மகன் என்கின்ற உணர்வு மறக்கவில்லை. பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்’ என்றாற்போல இவர் அவளை நினைக்காவிட்டாலும் அவள் இவரை நினைந்து அருள் செய்ய வந்தாளாம். மக்களில் பொல் லாத மக்கள் உண்டு; ஆல்ை தாய்மார்களில் பொல்லாத. தாய் இல்ல என்று வடமொழியில் ஒரு வாசகம் உண்டு. அதன்படி, “நான் என்னுடைய அன்னை இன்னுள் என்று: தெரிந்து கொள்ளாமல் தீய செயல்களைப் புரிந்து நின்றா. லும், அருள் உள்ளம் படைத்த என் அன்னே எனக்குத் தாயாகும் உரிமையை எண்ணி மககிைய என்னே ஆட். கொள்ளத் தானே வலிய வந்தாள். இதல்ை அவளுடைய தாய்த் தன்மை தெளிவாகிறது? என்பதை எண்ணித். “தாயே’ என்று சொல்கிறார். -

என் தாய் என்றதால், பல வகையாலும் தீமைகளே யுடைய என்னேக் கொண்டு என் தாய்க்கு இழுக்கு. யாரேனும் எண்ணி விடுவார்களோ என்ற அச்சம் உண் டாகிறது அபிராமிபட்டருக்கு. ஏழை ஒருவன் தன் தந்தையின் சொல்லக் கேளாமல் அலைந்து திரிந்து பிச்சை வாங்கித் தவிக்கிருன். யாரோ இரக்கம் உள்ள ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/93&oldid=680676" இலிருந்து மீள்விக்கப்பட்டது