பக்கம்:சரணம் சரணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறியிட்ட நாயகி 87

சகசிரநாமம் மகாராஜ்ஞ என்றும் ஸ்ரீமத் சிம்மாச னேச்வரி’ என்றும் சொல்லும் திருநாமங்களுக்கு ஏற்ற வகையில் காஞ்சிபுரத்தில் அம்பிகையைக் காணலாம்.

காஞ்சிபுரத்திற்குத் தனியே ஒரு புராணம் உண்டு. அங்கே எழுந்தருளியிருக்கும் ஏகாம்பரநாதர் மணல் லிங்கம். அதனுல் அந்தத் தலத்தைப் பிருதுவித்தலம் என்று பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகச் சொல்வர். காமாட்சி அம்பிகை மணலால் லிங்க உருவம் அமைத்துப் பூஜை பண்ணிள்ை என்றும், அப்போது கம்பா நதி பெருக் கெடுத்து ஓடி வர அச்சத்தில்ை சிவலிங்கப் பெருமான அணேத்தாள் என்றும், அவ்வாறு அணேத்தபோது எம்பெரு மாட்டியின் தனத்தின் வடுவும் வளைத் தழும்பும் இறைவன் மேல் அமைந்தன என்றும் புராணம் கூறும். இதல்ை ‘முலேத் தழும்பர்; வளைத்தழும்பர்’ என்று காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குப் பேர்கள் வந்தன. அன்பினல் சிவபெருமானத் தழுவிக் குழையச் செய்த பிராட்டி காமாட்சி. லிங்க உருவத்தில் எழுந்தருளியிருந்த அப்பெருமானத் தழுவும்போது அவனுடைய திருமேனி முழுவதும் அம்பிகையின் நகில் பட்டது. இந்த அற்புத மான வரலாற்றை எண்ணி அபிராமிபட்டர் ஒரு பாடலைப் பாடுகிரு.ர்.

தம்முடைய தாயாகச் சொல்லிய பாட்டுக்குப் பிறகு அந்தத் தாயின் பெருமையை எண்ணிப் பார்க்கிறார், பெருத்த வீரன் ஒருவனைக் குழைத்து அவனுடைய உடம் பெல்லாம், தனக்கு வசப்பட்டவன் என்பதற்கு அறிகுறி யாக முத்திரையிட்டாள் அம்பிகை’ என்று நயம்படக் சொல்ல வருகிறர். சிவபெருமானது பெரு வீரத்தை முதலில் எடுத்துச் சொல்கிறார், அவன் மூன்று புரங்களை எரித்தவன். அப்போது தங்கமலேயாகிய மேருவையே வில்லாக எடுத்துச் சென்றான். தாரகன், கமலாட்சன், வித் யுந்மாலி ஆகிய மூன்று அசுரர்களும், இரும்பு, வெள்ளி, தங்கமாகிய மூன்று மதில்களுள்ள மூன்று புரங்களேத் தமக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/97&oldid=680680" இலிருந்து மீள்விக்கப்பட்டது