பக்கம்:சரணம் சரணம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறியிட்ட நாயகி

தமிழ்நாட்டிலுள்ள சிவாலயங்களில் சிவபெருமானு டைய கர்ப்பக்கிருகத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருப் பான். அம்பிகைக்குரிய திருக்கோயிலில் தனித் திருநாமத் தோடு நின்ற திருக்கோலத்தில் அவள் எழுந்தருளியிருப் பாள். இது பொதுவாக எல்லாத் தலங்களுக்கும் இயல் பாகும். ஆனுல் காஞ்சிபுரத்தில் இந்த இயல்பைக் காண முடியாது. அங்கே உள்ள சிவபெருமானுக்குரிய ஆலயங் களில் அம்பிகையின் சந்நிதி இராது. காஞ்சிபுரத்தில் உள்ன பெரிய சிவாலயமாகிய ஏகாம்பரேசுவரர் கோயிலில் கூட ஏகாம்பரேசுவரர் மாத்திரமே இருக்கிறார். வேறு சிவா லயங்களிலும் அப்படியே. வெவ்வேறு திருநாமத்துடன் சிவபெருமான் மட்டும் அந்தக் கோயில்களில் எழுந்தருளி யிருக்கிருன்.

ஆளுல் அங்கே, எல்லாக் கோயில்களுக்கும் நடுநாயக மாக அன்னே காமாட்சி தனித் திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கிருள். காமாட்சி கோயிலில் சிவபெருமானுடைய சந்நிதி இல்லை. காமாட்சி அம்பிகை வீற்றிருக்கும் திருக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிருள். காஞ்சிபுரம் என்ற நகரத்தில் அந்தப் பெருமாட்டியே தலைவியாகவும், அரசி யாகவும் எழுந்தருளியிருக்கிருள். அந்த ஊரில் எந்தத் திருக் கோயிலில் விழா எடுத்தாலும் காமாட்சி அம்பிகையின் தி குக்கோயிலே வலமாகச் சூழ்ந்து செல்வதே வழக்கம். அம்பிகை அங்கே ராஜராஜேசுவரியாக, திரி புரசுந்தரியாக எழுந்தருளியிருக்கிருள். சிங்கா தனத்தில் வீற்றிருக்கும் ராணி அவள். லலிதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/96&oldid=680679" இலிருந்து மீள்விக்கப்பட்டது