பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டு மலரை நல்ல கிளேஸ் காகிதத்தில், சரஸ்வதியின் வழக்கமான அளவிலேயே 144 பக்கங்களில், உள்ளும் புற மும் வண்ண ஓவியங்களோடு தயாரிக்க வேண்டும் என்று விஜயபாஸ்கரன் ஆசைப்பட்டார். அது சாத்தியப்படவில்லை. போட்டோ தொழிற் பொருட்களின் திடீர் விலே உயர்வு, பிளாக் சார்ஜ் ஏற்றம், காகித விலே ஏற்றம் எல்லாம் புத்த காலம் போன்ற நெருக்கடியை உண்டாக்கி இருந்தன.

ஆகவே, 75 நயாபைசா விலையில் ஒரு மலர் உருவாக்கு வதற்குப் பதில் 60 நயாபைசாவுக்கு, 144 பக்கங்களில் மலர் வெளியிட்டு, பொன்னே வைக்கும்.இடத்தில் பூவை வைத்து திருப்தி பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

வண்ணப் படங்களுக்குப் பதிலாக, நான்கு பக்கங்களில், நடராஜர் சிலை, கன்னியாகுமரி, மதுரை மீனுட்சி கோயில், மாமல்லபுரம் கோயில்கள், மயிலே கபாலீஸ்வரர் கோயில் ஆகியவற்றை கறுப்பு மையில் அச்சிட்டு அகம் மகிழ வேண் டியதாயிற்று. ஆகாய நீலத்தைப் பின்னணியாகக் கொண்டு எடுப்பாக நிற்கும் மாமல்லபுரம் கற்கோயிலின் தோற்றம் வசீகரமான அட்டைப்படமாக அமைந்தது.

உள்ளடக்கத்தில் மலர் தரமும் சுவையும் மிகுந்ததாகவே இருந்தது. -

நல்ல பத்திரிகை - தி.ஜ.ர, தமிழகத்தில் திருமண முறைஎஸ். ராமகிருஷ்ணன், பழங்காலக் கதைகள் - வை. கோவிந் தன், முதுவார்களும் முருக வழிபாடும் - டி. செல்வராஜ், மறவா நாளே - கே. ராமநாதன், எழுத்தாளரின் சுவர்க் கம் - எச். எம். பி. முஹிதீன், (சோவியத் ரஷ்யா பற்றி யது), சாண் ஏற, முழம் வழுக்க - தி. க. சிவசங்கரன் (தமிழ் சினிமா பற்றியது) திருமணத்திற்கும் பின் - இஸ்மத் பாஷா (ஈ. வெ. ரா. பெரியார் திருமணமும் தி. மு. க. தோற் 'றமும் பற்றியது), ஆங்கிலம் நீடிக்க வேண்டுமா? -ஸி. எஸ். சுப்ரமணியம், தமிழில் அறிவியல் நூல்கள் . கண.

다 வல்லிக் கண்ணன் / 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/113&oldid=561194" இலிருந்து மீள்விக்கப்பட்டது