பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துக் கலேயைக் கட்டுத்திட்ட மின்றி வளர்க்கிறதோ, மக்களிடம், அறிவைப் பரப்புகிறதோ, பண்பாட்டை உயர்த் துகிறதோ, தூய முறையில் உற்சாகம் கொடுக்கிறதோ, என்ன நல்லது செய்யா விட்டாலும் சமூகத்துக்குக் கேடு செய்யாதிருக்கிறதோ, அதுவ்ே 'நல்ல பத்திரிகை. குடிசைத் தொழில் ரீதியான பத்திரிகையே நல்ல பத்திரிகையாக இருக்க முடியும்.”

இ2. வாசகர்கள்

மூன்ருவது வருடத்தில் தமிழ் நாட்டில் சிறந்த இலக்கியப் பத்திரிகை என்ற பெருமையை சரஸ்வதி அடைந்து விட் டது. இலக்கிய ஆர்வம் கொண்ட எழுத்தாளர்கள் ரசிகர் கள், புத்தக வெளியீட்டாளர்கள் முதலியோர் சரஸ்வதி'யின் இதழ்களே எதிர்பார்த்து, வரவேற்று, படித்துப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

என்ருலும், ஒவ்வொரு இதழும் ஆசிரியர் விஜயபாஸ் கரனுக்கு ரூ 150 கைப்பிடித்தம் ஏற்படுத்தி வந்தது. இந்த நஷ்ட்ம் பற்றி அவர் நண்பர்கள் பலரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். பத்திரிகை வளர்ச்சியில் அக்கறை காட் டிய அன்பர்களும் இதை உணரத் தவறவில்லை.

தி. க. சிவசங்கரன் மூலம் உண்மை நிலைமையை அறிய நேர்ந்த துத்துக்குடி எஸ். ஏ. முருகானந்தம் ஒருவழி வகுத் துக் கொடுத்தார். அவர் எழுதிய கடிதம் 1957 டிசம்பர் இத ழில் பிரசுரிக்கப்பட்டது.

  • சரஸ்வதி தமிழ்நாட்டில் வெளிவரும் ஒரு சில சிறந்த பத் திரிகைகளில் ஒன்று. அதிலும் தன்னலமற்ற முறையில் நல்ல கருத்துக்களே, காலத்திற்கு ஏற்றபடி தரும் மக்களுக்குத்

[; வல்லிக்கண்ணன் 11:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/117&oldid=561198" இலிருந்து மீள்விக்கப்பட்டது