பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்ந்தார்கள். கமிலுடன் பேசி முடித்த பிறகு நாங்கள் எல்லோரும் கடற்கரை மணலில் அமர்ந்து உரையாடி மகிழ்ந்தோம்,

"சரஸ்வதி பத்திரிகையின் வளர்ச்சிக்கான யோசனைகள், என்று வழக்கறிஞர் தனது எண்ணங்களைத் தெரிவித்தார். நம் பத்திரிகை நிறைய விற்பனையாகாமல் இருப்பது நம் முடைய தவறினுல் தான். நாம் நமது பத்திரிகையை மக் கள் மத்தியில் அறிமுகப்படுத்தவில்லை. படிப்பவர்களே நாம் தான் தயார்ப்படுத்த வேண்டும் என்று அவர் சொன்னர்.

-ஜனங்கள் பொழுது போக்கையே விரும்புகிருர்கள். சிந். தித்து உயர்வு அடையவோ, தங்கள் குறைகள் சுட்டிக் காட்டப்படுவதை உணர்ந்து தங்களேத் தாங்களே திருத்திக் கொள்ளவோ பெரும்பாலானவர்கள் பத்திரிகைகளே வாங்க வில்லை. பொழுது போக்கு அம்சம்தான் முக்கியமாக இருக்க வேண்டும். அத்துடன் நமது கருத்துக்களேயும் கலந்து கொடுக்க வேண்டும். பொழுது போக்கும் வழியையும், அதன் மூலம் மனசுக்குக் கொஞ்சம் இனிமையையும் ஜனங் கள் அடைய ஆசைப்பட்டால், அதைத் தவறு என்று சொல்ல முடியுமா? பெரும்பாலானவர்கள் சினிமாவை நாடு வது ஏன்? அழகான உருவங்காேப் பார்க்க முடியும்; தமாஷ் களே அனுபவிக்க முடியும். பத் மினி முகம் பார்ப்பதற்கு இனிமையாக இருக்கிறது, ஆசை தீரப் பார்க்கலாம் - இப் படி எல்லாம் தினத்துத்தான் போகிருர்கள். பார்க்கப் போனுல் இது தவறே இல்லை. நாம்கூட அழகான பெண் களைப் பார்க்க ஆசைப்படாமலா இருக்கிருேம்? கடற்கரைக்கு வருகிருேம்? எதிரே கவர்ச்சிகரமாக ட்ரெஸ் செய்துகொண்டு பெண்கள் வருகிருர்கள். அவர்களே கள்ளத்தனமாக நாம் கவனிக்க ஆசைப்படுகிருேம். பெண்களும் நம்மைப்பார்க்க ஆசைப்படுகிருர்கள். இது இயல்பு. இப்படிச் செய்யாதே என்று போதிக்க முடியுமா? என்று அந்த வக்கீல் கேட் டார். - -

辽 வல்லிக் கண்ணன் 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/121&oldid=561202" இலிருந்து மீள்விக்கப்பட்டது