பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறது. கடைகளில் காகிதம் கிடைப்பது அரிதாக இருக் கிறது. தப்பித் தவறி எங்கேயாவது கிடைத்தாலும் விலை பயங்கரமாக இருக்கிறது.

சென்ற மாத இறுதியில் ரீம் ஒன்று 20 ரூபாய்க்கு விற் ற காகிதம் இன்று 26 ரூபாய்க்கு விற்கிறது. 25 ரூபாய் கொ டுத்தே காகிதம் வாங்கியிருக்கிருேம். இந்த விலை ஏற்றத் தால் மட்டும் நமக்கு இந்த இதழுக்கு அதிகப்படியாக ரூ. 200 நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

காகிதத்தின் விலை மட்டுமா ஏறியிருக்கிறது? போட்டா சாமான்கள் கிடைக்காததால் பிளாக் செய்யும் செலவும்

சென்ற மாதத்தை விட 13 மடங்கு ஏறியிருக்கிறது."

நிலைமை இவ்வாறு இருந்த போதிலும், வி. பா. மனம் தளர வில்லை. சரஸ்வதி பெரிய அளவில் மாதம் தோறும் வரத் தான் செய்தது.

மார்ச் இதழில் தான் மு. நா. சீனிவாசன் கடிதமும், சரஸ் வதி வளர்ச்சி நிதி பற்றிய அறிவிப்பும், நிதி உதவியவர் களின் பட்டியலும் பிரசுரமாயின. அப்போது வசூலாகி யிருந்த தொகை ரூ. 34. இது நீளும்’ என அறிவிக்கப்பட்டி ருந்த போதிலும், பின்னர் நிதி பற்றிய செய்தி எதுவும் பத் திரிகையில் வரவில்லை. ஆகவே நிதி உதவி உற்சாகம் ஊட் டும் அளவில் வந்து சேர்ந்திருக்காது என்று கொள்ள வேண் டியது தான்.

'நஷ்டம் ஓரளவு சரிப்படும் என்று நினைத்த காலத்தில் இரு மடங்காய். 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக ஏறிவிட்டதே' என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வி. பா. அதற்காக பத்திரிகையின் பக்கங்களைக் குறைத்து விடவில்லை. விக டன் அளவில் 80 பக்கங்கள் 40 நயாபைசா விலை என்று சரஸ்வதி விஷயச் செறிவுடன் வளர்ந்து வந்தது.

வழக்கமான தொடர் அம்சங்கள் இருந்தன. எஸ். ராம

町 வல்விக்கண்ணன் 121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/127&oldid=561208" இலிருந்து மீள்விக்கப்பட்டது