பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வும், வரவேற்கவும், அழுத்தமான நம்பிக்கை நமக்கு ஏற். படட்டும். வாசகர்கள் சார்பில் மட்டுமல்ல, வாசகர்களே வளர்த்து உருவாக்கும் இலட்சிய எழுத்தாளர்கள் சார்பிலும் இந்த நம்பிக்கையை உண்டாக்கிக் கொள்வோம். உண்மை யின் ஒளி, உழைப்பின் அழுத்தம், எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நம்முடைய கைகள் வணங்

கட்டும்.”

3 வளர்ச்சிங் பாதையில்

முதல் மூன்று வருடங்களிலும் சரஸ்வதி உருவத்தில் சிறி தாக, கிரவுன் சைஸில் தான் வெளிவந்தது. நான்காவது ஆண்டில் முதல் இதழாக வந்த மலரும் அதே அளவில் தான் இருந்தது. அதற்கு அடுத்து வரவேண்டிய இதழி லிருந்து, பத்திரிகையின் அளவைப் பெரிது படுத்த - டெம்மி சைஸாக அதாவது ஆனந்த விகடன்’ மாதிரி மாற்றுவதற்கு விஜயபாஸ்கரன் திட்டமிட்டிருந்தார்.

இதில் அவர் எதிர்பாராத சங்கடங்கள் குறுக்கிட்டு விட்டன. அதனுல் இதழ் காலதாமதமாகவே வெளிவந்தது. அவரு டைய லட்சிய முயற்சியில் மற்றுமொரு சோதனையாகக் குறுக்கிட்ட இடைஞ்சல்தான் என்ன? அது பற்றி அவரே 1958 மார்ச் இதழில் குறிப்பிட்டிருக்கிருர்.

'நான்காம் ஆண்டு மலரைத் தொடர்ந்து இந்த இதழையே பெரிய அளவில் வெளியிடுவதென முடிவு செய்தொம். திடீ ரென்று பத்திரிகைக் காகிதம் சந்தையிலிருந்து பதுங்கிவிடும் என்று நாம் அன்று எதிர்பார்க்கவிலலை. இந்த இதழுக்குக் காகிதம் வாங்குவதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டி ஏற்பட்டுவிட்டது. யுத்த காலத்தில் காகிதத்துக் குத் தட்டுப்பாடு ஏற்பட்டது போல இன்று ஏற்பட்டிருக்

120 / சரஸ்வதி காலம் 罚

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/126&oldid=561207" இலிருந்து மீள்விக்கப்பட்டது