பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கத் தேவையே இல்லே. இந்த ஆசிரியர் குழுவையும் நீங்கள் எல்லோரும் வரவேற்று வாழ்த்துவீர்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

பொழுது போக்குக்காகவோ, பொருள் நோக்குக்காகவோ நடைபெறும் பத்திரிகைகளின் ரகத்தையோ, தரத்தையோ சேர்ந்ததல்ல சரஸ்வதி. நல்ல தரமுள்ள இலக்கியத்தையும், மனிதப் பண்புகளின் மேம்பாட்டுக்கான கருத்துக்களையும் வளர்க்க வேண்டுமென்பதே நமது கருத்து. ஜனநாயகத் தன்மை கொண்ட மனிதாபிமானத்தை வளர்க்கும் இலக் கியமே இன்றைய தமிழ் நாட்டுக்குத் தேவை. இத்தகைய இலக்கியத்தை ஊட்டி வளர்த்து ஊக்குவிப்பதும், உண்டாக் குவதுமான முயற்சிகனேயே நாம் மேற்கொள்ள வேண்டும். இவைதான் சரஸ்வதி ஆசிரியர் குழுவின் அடிப்படை நோக்கமாகும். -

இத்தகைய இலக்கியத்தை வளர்ப்பதற்குப் பரந்த விசால மான மனப்பான்மையும், சுதந்திரமான, சுயமான சிந்தனை யும், சிருஷ்டி ஆர்வமும் தேவை என்பதையும் நாம் உணர் கிருேம். எனவே சரஸ்வதி இந்த நோக்கத்தோடு பல்வேறு இலக்கியப் பரிசோதனைகளுக்கும் இடம் தந்து வளர்க்கும்; அத்துடன் இதே நோக்கையே அடிச் சரடாகக் கொண்ட இலக்கிய ஆராய்ச்சிகளிலும், விமர்சனத்திலும் ஈடுபடும். சரஸ்வதியில் வெளி வரும் விமர்சனம், ஆராய்ச்சி முதலிய வற்றில் வேறுபாடுகள் கொண்ட பல்வேறு கருத்துக்கள் காணப்படும் என்ருலும், அவையனைத்தும் அவரவருடைய சொந்த அபிப்பிராயமாகவும், அதே நேரத்தில் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்ததன்றே என்று கம்பன் பாடியுள்ளானே, அதே போன்று ஒத்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சத்திய சோதனையாகவும், வேறு பட்ட சிந்தனைகளின் சுதந்திரமான வெளியீடாகவும் தான் விளங்கும். சுருங்கச் சொன்னுல் சரஸ்வதி ஒரு பகிரங்கமான பட்டி மண்டபமாக, விவாத மேடையாகப் பணியாற்றும். நமது இலக்கிய லட்சியத்தை வளர்ப்பதற்கு இத்தகைய

● வல்லிக் கண்ணன் 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/133&oldid=561215" இலிருந்து மீள்விக்கப்பட்டது