பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ் தோறும் கவிதைகள் பல இருந்தன. வழக்கம்போல் புத்தக விமர்சனப் பகுதியை நான் கவனித்து வந்தேன்.

ஆகவே, சரஸ்வதி இலக்கியத் தரத்திலும் லட்சிய நோக்கி லும் முன்னேறிக் கொண்டிருந்தது. ஆளுல், அச்சகத்தில் நல்ல ஒத்துழைப்பு கிட்டவில்லை. சரஸ்வதியின் சாதனைகளைக் கொண்டாடும் விதத்தில், சிறப் பான ஒரு ஆண்டு மலர் வெளியிட வேண்டும், என்று விஜயபாஸ்கரன் திட்டமிட்டார். அதில் எதிர்ப்பட்ட சோதனை பற்றி நண்பரின் வார்த்தைகளையே இங்கு தருகிறேன்.

"நான் மலருக்கான அறிவிப்பை, அதில் எழுதும் எழுத் தாளர்களின் பெரிய பட்டியலைப் போட்டு, வெளியிட்டேன், 120 பக்கத்தில் ஒரு ரூபாய் விலையில் மலர் கிடைக்கும் என்று அறிவித்தேன். ஏஜெண்டுகளிடமிருந்து சுமார் 4,000 பிரதிகளுக்கு ஆர்டரும் வாங்கியிருந்தேன். சில பாரங்கள் அச்சாகியுமிருந்தன. இந்த நிலையில், அப்போது தான் வெளி வரத் தொடங்கியிருந்த தாமரையும், எதற்கென்று பெயர் இல்லாமல் ஒரு திடீர் மலருக்கான அறிவிப்பை ஜனசக்தியில் பெரிய விளம்பரமாக வெளியிட்டது. இதில் வேதனைக்குரிய விஷயம் ஒன்று உண்டு, சரஸ்வதி மலருக்கு எழுதுபவர் களாக யார் யார் பெயரெல்லாம் அறிவிக்கப்பட்டிருந்ததோ, அவர்களின் பட்டியலே அப்படியே போட்டு அந்த விளம் பரம் செய்யப்பட்டது. பக்கங்களை 128 ஆகக் காட்டி விலை யையும் எட்டணு என்று குறைத்து அறிவித்து விட்டார் கள். எனக்கு வீம்பு வந்தது, மலரின் பக்கங்களே 156 என அறிவித்து. ஜனசக்தியிலேயே நானும் ஒரு விளம்பரம் கொடுத்தேன்.

“தாமரையின் அறிவிப்பைக் கண்டு, சரஸ்வதிக்கு எழுதி வந்த சகல படைப்பாளிகளும் மிக்க வருத்தத்துக்குள்ளா ஞர்கள். தாமரைக்கு எழுத முடியாது என்று பலர் மறுத்து விட்டார்கள். இதனுல் கோபம் கொண்ட ஜனசக்திக்காரர்கள் சரஸ்வதி தயாரிப்பை தாமதமாக்கினர்கள். தாமரையின்

136 / சரஸ்வதி காலம் 町

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/142&oldid=561224" இலிருந்து மீள்விக்கப்பட்டது