பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் படங்களை வெளியிட்டு உங்களைக் கவர எண்ணுமல் பக்கங்களைக் கூட்டி - ஏராளமான கதைகள், கட்டுரைகள் கவிதைகள், நாவல், நாடகம் முதலியவற்றுடன்-- விஷயச் செறிவோடு மலரை 200 பக்கங்கள் கொண்டதாக வெளி யிடுகிருேம். -- ட

காலமெல்லாம் மணம் வீசும், கருத்திலே ஒளி வீசும் இந்த மலரை- இலக்கிய இதய மலரை. உங்கள் கரங்களில் சமர்ப் பிக்கிருேம். இவ்வித மலர்கள் துறு நூருய்ப் பெருகட்டும் என்ற இதய பூரிப்போடு ஏற்றுக் கொள்ளும் நீங்கள் சரஸ் வதி'க்கு ஒரு சிறு உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறீர் கள். உடனடியாக சத்தாதாரராகுங்கள். நீங்கள் ஏற்கனவே

சந்தாதாரர் என்ருல் உங்கள் நண்பர்களேச் சந்தாதாரராக் குங்கள், ஒரு நண்பரின் தூண்டுதலின் பேரில் சந்தாதாரர் ஆனவராக இருந்தால் இன்னும் பல நண்பர்களைச் சந்தா தாரராகத் தூண்டுங்கள், இந்த உதவியை நீங்கள் செய்ய முன் வந்தால் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பல புதிய சிகரங்களே ஏற்படுத்தும் பெருமைக்கு நாம் அனைவரும் உரியவர்களாவோம்.”

இம்மலரின் விஷயங்கள், கவிதைகள், கட்டுரைகள், நாடகம் சிறுகதைகள், நாவல், சிறுகதைகள்-11 என்று பகுதி பகுதியாகப் பிரித்து அச்சிடப்பட்டிருந்தன.

கே. ஸி. எஸ். அருணுசலம் (பொண்னென்ன செய்தாளோ பொங்கலுக்கு?) சசிதேவன் (நீர்த்துகில்) மாயூரம் ராஜகோ பால் (திவ்யதரிசனம்), கலிங்கன் (அவலம்), தான் தோன் றிக் கவிராயர் (பஸ்மாத்திரம்), முருகையன் (பொங்கல்இனிது) ஆகியோர் கவிஞர்கள்.

தமிழிலக்கியத்தில் முதல் நாவல் (கமில் ஸ்வெலபிள்), புதுக் கவிதை (க. நா. சுப்பிரமணியம்), வங்கமும் தமிழகமும் (வெ. சாமிநாதசர்மா), பொற்பின் செல்வி (எஸ். ராமகிருஷ்ணன்) மந்திரியின் விருந்தாளி (கே. இராமநாதன்) தமிழில்

コ வல்லிக்கண்ணன், 143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/149&oldid=561231" இலிருந்து மீள்விக்கப்பட்டது