பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது ஆண்டின் (1956) பரிசு கல்கி'யின் அல ஓசை’ நாவலுக்கு அளிக்கப்பட்டது. பரிசளிக்கப்பட்ட ஆண் டுக்கு இரண்டு ஆண்டுகள் முன்பே ஆசிரியர் கல்கி இறந்து விட்டார். இறந்து போன ஒருவரின் படைப்புக்குப் பரிசு அளிக்கப்பட்டதற்கு திரை மறைவுக்குக் காரணங்கள் உண்டு என்று பேச்சுப் பிறந்தது. 1957ல் எந்தப் புத்தகமுமே பரி சுக்குத் தகுதியில்லே என்று தீர்மானிக்கப்பட்டதால், பரிசு அளிக்கப்படவேயில்லே.

கமிட்டி அங்கத்தினர்களில் முக்கியமானவர்கள் சிலபேர் பரிசு என் புத்தகத்துக்கு வேண்டும்’ எனக்கே வேண்டும், என்று சண்டை பிடித்துக் கொண்டதால், திருப்திகரமான சமாதானம் ஏற்படாததால், இந்த முடிவு அறிவிக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டார்கள்.

1958-ல் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற புத்தகத்துக்குப் பரிசு தரப்பட்டது. முதலாவதாக, இது ஒரு சொந்த சிருஷ்டி அல்ல வால்மீகி ராமாயணக் கதைச் சுருக்கம். இரண்டாவதாக இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1956-ம் வருடமே வந்துவிட்டது. அகாடமியாரின் 1957ம் வருட முடிவுப்படி, நியாயமாக எந்த ஒரு ஆண்டி லுமே பரிசு பெறத் தகுதி இல்லாத நூல்களில் அதுவும் ஒன்று என்ருகி விட்டது. இருந்தபோதிலும், அடுத்த வருட மே அகாடமி அந்தப் புத்தகத்துக்குப் பரிசு கொடுக்கத் துணிந்தது. இதற்கும் திரைமறைவுக் காரணங்கள் இருந்த தாகப் பேச்சு வளர்ந்தது. கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்த நியாயமான சீற்றத்தின் குரலாக சரஸ்வதி செயல் பட்டது.

சாகித்திய அகாடமியின் செயலேக் கண்டித்து, விஜயபாஸ் கரன் 10 - 3 = 59 இதழில், நோக்கமும் செயலும் என்று

ஆசிரியர் குறிப்பு எழுதினர். அந்த இதழ் ஒரு கடிதத் துடன் அகாடமிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அகாடமியிட

மிருந்து வந்த பதிலும், அதன் மேல், ஆசிரியர் குழு'வைச்

145 / சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/152&oldid=561234" இலிருந்து மீள்விக்கப்பட்டது