பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்கு ஏற்பட்ட நெருக்கடியை, நிலமையை உணர்ந்த வாசக நண்பர்கள் சந்தாதாரர்கள், ஆளுர்கள். பல ஏஜண்டு நண்பர்கள், உடனடியாக பில் தொகையை அனுப்பி வைத் தார்கள், இன்னும் பலர் சரஸ்வதியின் வளர்ச்சிக்காகத் தங் களால் இயன்ற பொருளுதவியும் செய்தார்கள். இவற்றின் அளவு குறைவாய்த் தெரிந்த போதிலும், இதன் முழு அளவு சுருங்கியதல்ல, விஸ்தாரமானது என்று நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிருர்கள்.

சரஸ்வதிக்கென சொந்த அச்சகம் உருவாகியிருக்கிறது. சோர் வினுலும், நெருக்கடியினுலும், குறித்த காலத்தில் தவருது தடைப் பட்டிருந்த சரஸ்வதி-- உங்கள் கையிலிருக்கும் இந்த இதழிலிருந்து- தொடர்ந்து ஒழுங்காக வெளிவரும் என நம்புகிருேம். நம்பிக்கை தெரிவிப்பது எங்கள் கடன் , நம்பிக்கை தருவது உங்கள் கடமை.

புதிய தமிழ் இலக்கிய உலகில் எல்லோரும் சேர்ந்து சாதித் தது மிகக் குறைவு. நாம் மட்டும் சாதித்தது மிகமிகக் குறைவு. நாம் மட்டுமே சாதிக்க வேண்டியதோ மிகமிக ஏராளம், செய்ததைச் சொன்னது சுயபுராணமாகச் சிலருக் குப் படலாம். செய்து வந்ததைப் பின்னுேக்கிப் பார்த்தால் தான் செயலாற்றப் பட வேண்டியதை முன் கூட்டிக் கணிக்க முடியும். நம்மை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டுத் தொடக்கத்திலும் இப்படிப்பட்ட சுயநோக்குத் தன்மை இன்றியமையாதது.

தோற்று விட்டோமோ, என்ற அச்சம் எனக்கு எழுந்ததன் விளைவாக, தோற்கவில்லே தோற்கமாட்டோம் என்ற நம் பிக்கைக் குரல் தமிழ் நாட்டிலிருந்தும் கடல் கடந்த பிரதே சங்களிலிருந்தும் அலே அலேயாக எழுந்தது.

நமது நண்பர்களுக்கெல்லாம், நம்மைச் சேர்ந்தவர்களுக்கெல் லாம், நமது கோஷ்டி இது என்று எண்ணிக் கும்மாளியிடும் உணர்ச்சி மிக்க தோழர்களுக்கெல்லாம், ஏன் இந்த ஒப்பாரி'

匣 வல்லிக் கண்ணன் 167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/173&oldid=561255" இலிருந்து மீள்விக்கப்பட்டது