பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது அங்கே வந்து சேர்ந்த கதை சுவாரஸ்யமானது. ஆங் கிலப் புத்தகங்களே இப்படிப் பெரிய பெரிய தொகுதிகளாகப் பிரசுரிக்கும் சில் கம்பெனிகள் விளம்பரம் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவரும். புத்தகங்களின் பெருமைகளே முழக்கிவிட்டு, நீங்களே கண்டுணரலாம். இளு மாக, எங்கள் செலவிலே உடனே எழுதிப் போடுங்கள். நாங்கள் அனுப்பி வைக்கிருேம். இரண்டு வாரங்கள் வைத் திருந்து அதன் சிறப்பைக் கண்டறியுங்கள். மனசுக்குப் பிடித்தால் உரிய விலையை அனுப்புங்கள். பிடிக்காவிட்டசல், புத்தகங்களை எங்களுக்கே திருப்பி அனுப்பி விடுங்கள். நேச காஸ்ட் ட்ரெயல் ஆஃபர் என்றெல்லாம் ஆசைகாட்டும் அந்த விளம்பரம். வசீகரமாகக் காட்சி தரும் விளம்பரத்திலேயே, கண்ணேயும் மனசையும் சுண்டி இழுக்கும் வர்ணங்களில் புத் தகங்களின் தோற்றமும் அச்சாயிருக்கும். நாமும் எழுதிப் போட்டு பார்க்கலாமே! புத்தகம் வந்ததும் புரட்டிப் பார்த்து விட்டு இரண்டுவாரங்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பினுல் போச்சு என்ற எண்ணம் புத்தகப் பிரியர்களுக்கு இயல் பாகவே ஏற்படும்.

அவ்விதமான ஒரு எண்ணத் தூண்டல் காரணமாகத்தான் விஜயபாஸ்கரனும் கம்பெனிக்கு எழுதிப்போட்டார். பத்துத் தொகுதிகள் கொண்டநூல்கள், நேர்த்தியாக பேக் செய்யப் பட்டு', ஜோராக வந்திறங்கியது. ரூ 950 -மதிப்புக் கொண் டது. உங்களுக்காக கன்ஸ்ெஷன் விகிதத்தில், ரூ. 850 க்குத் தரப்படும். உங்களுக்குத் திருப்தி அளிக்காவிட்டால், தயவு செய்து பழையபடி நன்ருக பேக் செய்து எங்களுக்குத் திருப்பி அனுப்புக என்ற பணிவான வாசகங்கள் அடங்கிய கடிதமும் வந்தது.

புத்தகங்கள் மிக அருமையானவை. உள் அடக்கத்தில் மட்டுமல்ல. அச்சு அமைப்பு, சித்திரங்கள், கலர் படங்கள், மிக உயரிய பைண்டிங், தோற்றம் முதலிய அனைத்து விஷ யங்களிலும், புத்தகப் பிரியர்களின் உள்ளத்தைக் கொள்ளே

ü வல்லிக் கண்ணன் 169

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/175&oldid=561257" இலிருந்து மீள்விக்கப்பட்டது