பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளும், விதத்தில் தயாரிக்கப்பட்டவை. புத்தகம் வாங் குவோரின் மன பலவீனத்தைப் பயன்படுத்தித்தான் இத் தகைய ட்ரெயல் ஆஃபர் களே நடத்தப்படுகின்றன.

ஆர்டர் கொடுத்து, கம்பெனி செலவில் புத்தகங்களை வர வழைக்கிறவர்கள் அவற்றைப் பார்த்ததுமே மயங்கி விடு வார்கள். அவற்றின் உயர்தரத்தை உணர்ந்ததும் புத்தகங் களேத் திருப்பிவிடத் துணியமாட்டார்கள். இந்த உள இயல்பை நன்ருக அறிந்துள்ளனர் கம்பெனிக்காரர்கள்.

வி. பா. விஷயத்திலும் அதுவே நடந்தது. இவ்வளவு அரு மையான, உயர்ந்த, புத்தகங்களே திருப்தி தரவில்லை என்று எப்படித் திருப்பி அனுப்புவது? நமக்கே இருக்கட்டும். நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் நிஜனத்தார். பணத்தை அனுப்பி விட்டார்.

புத்தகத்தின் பத்து வால்யூம்களையும் அவர் அமைதியாக பக்கம் பக்கமாக, ஒரு தடவை புரட்டிப் பார்த்திருக்கக் கூடும். ஒன்றிரண்டு தொகுதிகளே அநேக தடவைகள் திருப்பிப் பார்த்து, அங்கும் இங்குமாக எது எதையாவது படித்திருக்கக்கூடும். -

ரிடர்ஸ் டைஜஸ்ட்டில் ஆர்ம் சேர் டிரேவலாக் என்று, இருந்த இடத்தில் இருந்தபடியே அயல்நாடுகளையும் அய லூர்களேயும் அறிமுகம் செய்து கொள்ள வசதியாக, வெவ் வேறு நாடுகள் நகரங்கள் பற்றிய ரசமான கட்டுரைகள் பிர சுரமாகும். பிரயாணம் போகாமலே பிரயாண அனுபவத்தைப் பெறுவது போன்ற பிரமையை உண்டாக்கும் விதத்தில் அக் கட்டுரைகள் தயாரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய கட்டுரைகளே தமிழிலும் எழுதவேண்டும் என்ற ஆசை நண்பருக்கு உண்டு. அப்படிக் கட்டுரைகள் 6.Τ(ίggi, . இத்தொகுதிகள் உதவியாக இருக்கும் என்றும் அவர் நினைத் தார். அவரே அல்ஜீரியா, அல்பேனியா என்றே என்னவோ

170 / சரஸ்வதி காலம் 日

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/176&oldid=561258" இலிருந்து மீள்விக்கப்பட்டது