பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சி பெறுவதற்காக ஏதேனும் ஒரு பத்திரிகை அலுவலகத் தில் சேர வேண்டும் என்று விரும்பி, எனக்கு அறிமுகம் ஆகி யிருந்த ஆசிரிய நண்பர்களுக்கு எழுதினேன். காலம் வரும் வரை காத்திருக்கும்படி அனைவரும் அறிவித்திருந்தனர்.

அந்நாட்களில், புதுக்கோட்டையில் ராசி. சிதம்பரம் அதிப. ராகவும் ராம. மருதப்பன் ஆசிரியராகவும் இருந்து திருமகள்' என்ற மாசிகையை நடத்தி வந்தார்கள். மணிக்கொடி’ ரசிகர்களான அவர்கள் தங்களது ஆற்றலுக்கு ஏற்றபடி அந்தப் பத்திரிகையை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். கலா மோகினி'யின் வெற்றியைக் கண்ட அதிபர், திருமகளே யும் அது போன்ற மறுமலர்ச்சி ஏடு ஆக மாற்ற ஆசைப் பட்டு, சாலிவாகனனிடம் கலந்தாலோசித்தார். நண்பர் யோசனைகள் கூறியதோடு, என்னே புதுக்கோட்டை சென்று ஆவன செய்யுமாறு ஏற்பாடு செய்தார்.

ஒன்றரை வருடங்கள் திருநெல்வேலியில் எழுத்து வேள்வி நடத்தி வாழ்ந்த நான் திருமகளுக்கு உதவி புரியச் சென் றேன். அந்தப் பத்திராதிபரின் ஆசையும் ஆர்வமும் வெறும் பேச்சளவிலே தான் நிற்கும்; திருமகளுக்கு வளர்ச்சி இல்லை என்பது ஒரு மாத காலத்திலேயே எனக்குப் புரிந்து விட்டது. ォ

அச்சமயம், கோயம்புத்துாரில் சினிமா உலகம் மாதமிரு முறையை வெளியிட்டு வந்த பி. எஸ். செட்டியார் என்ன அங்கே அழைத்தார். சினிமா உலகத்துக்கு என் சேவை தேவை என்றும் நான் அங்கு வந்தால் பின்னர் எனக்காக

• நிலா என்ருெரு இலக்கிய சஞ்சிகையைத் தொடங்கத் தம்மால் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். நான் அங்கே போய்ச் சேர்ந்தேன், -

சினிமா உலகம் பத்திரிகையையே சரிவர வளர்ப்பதில் உற்சாகம் காட்டாத அதன் ஆசிரியர், பொற்காலப் பிரசுரம்"

26 சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/32&oldid=561112" இலிருந்து மீள்விக்கப்பட்டது