பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்தினம் முதலியோர் கதையும் கட்டுரைகளும் எழுதித் தந்தார்கள்.

தமிழ் நாட்டில் மலர்கள் பலவும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சரியார், மகா கணம் சாஸ்திரியார், மாண்புமிகு மந்திரியார் என்று பெரிய பெரியவர்களின் எழுத்துக்களே முதலில் வெளி விட்டுச் சிறப்பிப்பதையே ஒரு மரபு ஆக வளர்த்துக் கொண்டிருந்த காலத்தில், கிராம ஊழியன் தனது ஆண்டு மலரில் இலங்கை சோ. தியாகராஜன் என்ற எழுத்தாளரின் கட்டுரைக்கு முதலிடம் கொடுத்தது. இதனுல் இலங்கைத் தமிழர்கள் பெருமையும் பெருமகிழ்வும் கொண்டார்கள்.

அதன் பிறகு, இலங்கையர்கோன் ஊழியன் நின்று விடுகிற வரை நாடகங்களும் கதைகளும் எழுதி வந்தார். வேறு சில புதிய எழுத்தாளர்களும் பழம் எழுத்தாளர்களும் ஊழியன்’ இலக்கியப் பணியில் பங்கேற்றுக் கொண்டார்கள்.

1944 இறுதியில், திருலோக சீதாராம் தனி வழி காண்பதற்காக, "ஊழியன் ஆசிரியப் பொறுப்பைத் துறந்து விட்டு திருச்சி சென்ருர், சிவாஜி ஆசிரியர் ஆர்ை. அதுமுதல், கிருஷ்ண சாமி ரெட்டியார் நிர்வாக ஆசிரியராகவும், நான் ஆசிரியர் ஆகவும் பொறுப்பு வகித்துப் பத்திரிகையை நடத்தி வந்தோம். எழுதுகிறவர்களுக்குப் பணம் தரும் நிலையில் ஊழியன்’ இருந்ததில்லை. அதனுல், பெயர் பெற்ற எழுத்தாளர்கள் எங்களோடு ஒத்து உழைக்க மறுத்து விட்டார்கள். அதற் காக நாங்கள் கவலைப்படவில்லை. நான் ஏகப்பட்ட புனே பெயர்களில் வெவ்வேறு விதமான நடைகளில் பலரகமான விஷயங்களேயும் இதழ்தோறும் எழுதலானேன்.

ரெட்டியாரும் இரண்டு மூன்று பெயர்களில் எழுதினர். "ஊழியன் மூலம் அறிமுகமான தி. க. சிவசங்கரன் துருவன்’ என்ற பெயரில் சூடாகவும், காரசாரமாகவும் சினிமா விமர்சனங் களும், கவிதை, நாடகம், கட்டுரைகளும் எழுதினர். என்

32 / சரஸ்வதி காலம் ■

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/38&oldid=561119" இலிருந்து மீள்விக்கப்பட்டது