பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ി:ു. ಅfarârâ கொண்டு பிளந்தாலும் கட்டு மாரு மன உறுதி எங்களுக்கு மட்டுமில்லை; எங்கள் எழுதுகோலுக்கும் உண்டு.

‘துயவை துணிந்த பின்பு பழி வந்து தொடர்வதில்லை."

இந்த அறிவிப்புடன் ஆரம்பித்த முல்லையின் மறுமலர்ச்சி மிகு தியும் பாராட்டத் தகுந்ததாக அமைந்தது. ரகுநாதன் கதை களும், கவிதைகளும் சிறப்பாக இருந்தன. புதுமைப்பித்தன் விபரீத ஆசை அவதாரம் போன்ற கதைகளே எழுதி உதவி ஞர். லா. ச. ராமாமிர்தம், எம். வி. வெங்கட்ராம் முதலியவர் களின் கதைகளும் வந்தன. இலக்கியத்தில் ஆபாசம்’ என்ற கூச்சல் அர்த்தமற்றது, போலியானது, தமிழ் இலக்கியத்துக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று விரிவாகவும் விளக்கமாக வும் கு. அழகிரிசாமி கட்டுரை எழுதினர். குழந்தை எப்படிப் பிறக்கிறது? என்று பொ. திரிகூடசுந்தரம் பிள்ளை எழுதிய புத்தகத்தை மதிப்புரைக்கு எடுத்துக் கொண்டு, அதன் தவறு களேச் சுட்டிக்காட்டியதோடு, ஆண் பெண் உறவு பற்றிய ஞானம் தெளிவுறக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை விளக்கியும் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றையும் அழகிரிசாமி (இடைசைப் புலவன்) எழுதினர்.

இவ்வாறு, 'முல்லே தமிழிலக்கிய முன்னேற்றத்துக்கு ஒரு சுப சூசகம். இலக்கியத்தில் புதுமையும், தனிமையும் உண்டாக்க விரும்புபவர்களுக்கு ஒரு நற் சகுனம், நம்பிக்கை’ என்று கொடி வீசி வளர முயன்றது. ஆயினும் வாழவில்லை.

புதிய பத்திரிகை ஆரம்பிக்க முடியாத நிலைமை நீடித்த போது, செத்துக் கொண்டிருந்த அல்லது, மெலிந்து தளர்ந்து பெயரளவில் நடந்து கொண்டிருந்த - பழைய சிறு பத்திரிகை களே வாங்கி, புத்துயிரும் புது வேகமும் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் சிலர். இந்த ரகத்தில் சேர்ந்தது சந்திரோ தயம்.”

蠱 வல்லிக் கண்ணன் / 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/43&oldid=561124" இலிருந்து மீள்விக்கப்பட்டது