பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான கற்பனையாக மாறிற்று. அந்தக் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களும் வார்த்தைகளும் இலக்கியத்தில் புகுந்து அதை வாழ்க்கையிலிருந்து பிரித்து விட்டன. பிறகு ஆழ்வார்கள் முத லியவர்கள் தோன்றின பொழுதுதான் மன நிகழ்ச்சிகள் மூலமா வது இலக்கியம் வாழ்க்கையுடன் பிணேப்புக் கொண்டது.

சென்ற நூறு வருஷங்களாக தமிழ் எழுத்து அதற்கு முன் இருந்த விபரீதத்தைத் துறந்து நடைமுதலுக்கு வர ஆரம் பித்து விட்டது. வாழ்க்கையில் அடிபடாத செந்தமிழ் நீங் கித் தமிழன் பேசும் பாஷை இலக்கியத்தில் இடம் பெற்று விட்டது. அந்த ஆதிக்கத்தைப் பரப்பத்தான் இன்று புது மை எழுத்தாளர்கள் எழுதுகிருர்கள். பேச்சு நடை இலக் கியத்தில் ஸ்தானம் பெறுவது அவர்கள் முதல் லட்சியம்." (கு. ப. ரா. - புது எழுத்து கட்டுரையில்)

சங்க காலம் தமிழின் மலர்ச்சிக் காலம். இடைக் காலம் தமிழ் வாட்டமுற்றிருந்த நிலை. அதை மாற்றி, தமிழ் இலக் கியத்தில் புது வளர்ச்சி காண முயன்றவர்கள் மறுமலர்ச்சிக் காரர்கள்.

இந்த நூற்ருண்டின் முப்பதுகளிலும், நாற்பதுகளின் முதல் பாதியிலும் இருந்த நிலமை அது. நாற்பதுகளின் பிற்பகு தியில் தமிழ் எழுத்தாளர்களிடையிலும் தமிழ்ப் பத்திரிகை உலகிலும் வேறு இரண்டு நோக்குகளும் போக்குகளும் தலே காட்டின. . .

ஒன்று உலகளாவிய அரசியல் பொருளாதார தத்துவத்தின் தாக்கத்தில்ை ஏற்பட்டது, மற்றது; தனிநபர் ஒருவரின் செல்வாக்கினல் விளைந்த பாதிப்பு. . .

முதலாவது - மார்க்ஸிய லெனினியக் கோட்பாடுகளே ஆதார மாகக் கொண்ட கம்யூனிஸத்தையும், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும் அஸ்திவாரமாகப் பெற்றது. முதலாளித்துவ எதிர்ப்பு, முதலாளிவர்க்க, ஒழிப்பு, பட்டாளிவர்க்க உயர்வு,

64 / சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/70&oldid=561151" இலிருந்து மீள்விக்கப்பட்டது