பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போராடினர் என்ருல், அது தவருகாது. (விளக்கம் வேண்டு வோர், "புதுமைப் பித்தன் கட்டுரைகளையும், காஞ்சனே என் னும் தமது சிறுகதைத் தொகுதிக்கு அவர் எழுதியுள்ள முக வுரையையும் காண்க)

நவசீனப் புதுமை இலக்கியத்தின் தந்தையான லூசூனையும் புதுமைப் பித்தனேயும் ஒரே தராசில் எடைபோடுவது முற்றி லும் தவருகும். . - மகாகவி பாரதியோடு புதுமைப் பித்தனச் சரிசமமாக ஒப்பிடுவது எவ்வளவு வேடிக்கையான விஷயமோ அவ்வளவு விளுேதமான விஷயம் இது.

எந்த ஆசிரியனே உரைகல்லில் ஏற்றினுலும், உருவத்தையும் உள்ளடக்கத்தையும் சேர்த்துத்தான் மதிப்பிட வேண்டும். நமது வசதிக்காக, நமக்குப் பிடித்தமானவர் என்பதற்காக, நமது தமிழ் நாட்டுக்காரர் என்பதற்காக நாம் புதுமைப் பித் தன ஏற்றிப் போற்றி விமர்சனம் செய்தால், வீரவணக்கம் செய்தால், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகுந்த இன்னல் வரும் என்பதே என் கருத்து. புதுமைப் பித்தனின் இந்த நினைவு நாளில் நாம் அவருக்குப் பணிவன்புடன், மனமார, வணக்கம் செய்வோம், ஆளுல் விர வணக்கம் வேண்டாம்!' -

இந்த மலரைப் பாராட்டி வந்த கடிதங்களில் சில அடுத்த இதழில் உங்கள் குரல் பகுதியில் பிரசுரிக்கப்பட்டன.

  • தி. க. சி. துங்கி எழுந்தவர் போல் -தமிழகம் புதுமை பித்தனுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடுவதைக் கண்டாற் போல - வீரவணக்கம் வேண்டாம்' என்ற தலைப்பில் எழு தியிருப்பது வேதனை விளைவிக்கிறது. இவ்வாறு இவர் எழுதி யிருப்பது தமிழகத்தை நோக்கியல்ல. புதுமைப்பித்தன் பிரி யர்களைத் தான் குறிப்பிடுவதாக இருக்கிறது. தனிப்பட்ட காழ்ப்பாகவே தோன்றுகிறது" என்று ஒரு ரசிகர் குறிப்பிட் டிருந்தார். - - - . . . . . . -

[...] வல்லிக் கண்ணன் , 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/85&oldid=561166" இலிருந்து மீள்விக்கப்பட்டது