28
சரிந்த சாம்ராஜ்யங்கள்
சந்திரகுப்தன் சாணக்கியன் அபிமானம்
இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த சாணக்கியன் ஏன் தானே மன்னனாக வர வேண்டும் மென்று நினைக்கவில்லை. அல்லது சில நாட்களுக்குப் பிறகாவது மன்னனாக வரலாம் என்ற எண்ணம் ஏன் தோன்றவில்லை. இங்கேதான் ஆரியர்களுக்கு தனித் தனியான சுயநலத்தைவிட தன் இனத்தையே காப்பாற்றித் தீரவேண்டுமென்ற உணர்ச்சி அதிகம் என்பதை முன்பு சுட்டிக் காட்டியிருந்தோம்.
அலெக்ஜாண்டரின் நடமாட்டத்தாலும், அவனே நடமாடச் செய்த சாணக்கியனாலும் அழிந்த நந்த சாம்ராஜ்யத்துக்குப்பின் தோன்றிய மெளரிய சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன். தனக்கு இவ்வளவு பெருமைகளைத் தேடித் தந்த சாணக்கியனையே தன் ராஜ குருவாக ஏற்றுக்கொண்டான். இவனுடைய காலத்தில் தான் பெரிய பெரிய அணைக்கட்டுகளையும், நீர்த் தேக்கங்களையும் உண்டாக்கினான். நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியை பங்கிட்டு அளித்து அதற்குண்டான வரிகளை வசூல்செய்தான். இவ்வளவு தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுத்தும் சரியாக விவசாயம் செய்யாதவர்களைக் கடுமையாகத் தண்டித்தான். தன் தலை நகருக்கு மிக தூரத்திலிருந்த கத்தியவார் என்ற பிரதேசத்திற்கு புஷ்யமித்திரன் என்பவன் ஒருவனை கவர்னராக அமைத்து ஆளச் செய்தவனும், நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தருவதில் நிபுணனான சுதர்சனன் என்பவனை ஆதரித்து நாட்டின் பொருளாதார முன் னேற்றத்தையும் நில வளப்பத்தில் பலவித சீர்த்திருத்தங்களையும் செய்தான்.