பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சரிந்த சாம்ராஜ்யங்கள்



இந்த மாபெரும் அறிஞன் உபகுப்தன் சொல்லியவற்றைக் கேட்ட அசோகன் கலிங்கப்போரை நிறுத்தி விட்டு கண்கலக்கத்தோடு தாயகம் திரும்பினான். இந்த கலிங்கப் போர் ஒன்றேதான் அசோகனுடைய முதல் போரும் கடைசிப் போருமாகும். அசோகன் என்றால் சோகமில்லாதவன் என்ற பொருளுக்கு நேர் விரோதமாக சோகமிக்கவறாய் விட்டான்.

இந்த சிந்தையில் இவன் ஆழ்ந்து தனது ஆட்சி முறையை மாற்றியமைக்கவில்லையானால் இந்த அகிலத்தையே அவன் கட்டியாண்டிருக்கலாம். அந்த அளவுக்கு ஆட்சியை விரிவாக்க, நாடு பிடிக்க, வரிகளை வசூலிக்க, கலகம் நடவாமலிருக்க, பலவிதமான ஒற்றர்கள் சகிதம் ஆட்சி முறையை அமைத்துத் தந்திருந்தான் சந்திரகுப்தன். ஆனால் ஆட்சியின் சுக்கானை அன்புமயமான அறவழியில் செலுத்தி புத்தன் பொன் மொழிகளையே தன் ஆணைச் சக்கரமாக அமைத்துவிட்டான். அன்று தொடங்கி விவேகம் வளர்ந்தது என்றாலும், ஆட்சியின் முன்னேற்றத்தில் இன்றியமையாதது என்று கருதப்பட்ட வீரம் விடைபெற்றுக்கொண்டது.

பாடலீபுரத்திலிருந்து மன்னன் தேர் புறப்பட்ட தென்றால் போருக்காக இருக்காது. தான தருமம் செய்ய, கல் தூண்களை அமைக்க, புத்த பிட்சுகளைக் கண்காணிக்க, இதைப் போன்ற இன்னும் பல நல்ல காரியங்களுக்காகத்தான் இருக்கும் என்ற நிலையாய் விட்டது.

புத்தர் கொள்கைகளை தென் நாட்டு அரசர்களுக்கு சொன்னது மாத்திரமன்றி, கடல் கடந்தும் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தால் தன் உடன் பிறந்தான்