பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சரிந்த சாம்ராஜ்யங்கள்


டான் ஒளரங்சீப். இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒளரங்கசீப்பின் பின் நின்ற படை வீரர்கள் முகத்திலே ஒளியில்லை. தலை முறை தலை முறையாக போரிட்டு அவர்கள் முகத்திலே சோகம் ததும்பியது. பல யுத்தங்களைக் கண்டவர்கள், பரம்பரைப் போர் வீரர்கள், மாற்றானின் படைக்கு அஞ்சித் தோற்றோடாத மக்களின் சந்ததியார்கள்தான். இப்போது வலிமை இழந்து நிற்கிறார்கள். மத போதை இவர்கள் உடலிலே தோன்றிய வீரத்தின் சாரத்தை உறிஞ்சிவிட்டது. ஓயாமல் போர் போர் என்று போரிட்ட அவர்கள் கைகள் பலம் குன்றி விட்டன. இப்படிப்பட்ட படையை வைத்துக்கொண்டு தான் ஒளரங்கசீப் சிவாஜியின் எதிர்ப்பை சமாளிக்கலாம் என்று கனவுகண்டான்.

சிவாஜியின் கையில் என்று வாள் மின்னியதோ அன்றே தனது, சாம்ராஜ்யம் இடியத் தொடங்கியது என்பது ஒளரங்கசீப்புக்குத் தெரியாது. ஜெஸியா வரியைக் கொடுக்கவேண்டும் என்று என்றைக்கு உத்திரவிட்டு இந்துக்களின் தீராப் பகையை தேடிக்கொண்டானோ, என்றைக்கு தன்னால் கொலை செய்யப்பட்ட சீக்கிய மத குருவின் உடலில் சொட்டிய இரத்தத்தைப் பார்த்து கேலிச் சிரிப்பினால் தங்கள் அகங்காரத்தை சீக்கியர்களுக்கு அறிவித்தானோ, அன்றைக்கே முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி அத்தியாயத்தை ஒளரங்கசீப் எழுத ஆரம்பித்துவிட்டான் என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்லிவிட்டனர். இந்துக்கள் கல்லை வணங்கும் கயவர் கூட்டத்தினர். அவர்களிடம் எப்படி வீரம் உருவாகும் என்று இறுமாந்திருந்தான். சிவாஜியின் தன்மையில் இந்திய வீரம் ஒளரங்கசீப் கண்டு வியக்குமாறு உருப்பெற்றது. குருவைக் கொலை செய்தவன் குவல