சி. பி. சிற்றரசு
71
யத்தை ஆளும் மன்னன் என்றாலும் அவன் கொட்டத்தை அடக்க வேண்டும். நமது குருதேவர் மடிந்த இடம் மறையு முன்பே அவரைக் கொலை செய்தவனின் உருவமும் மறைய வேண்டும் என்று சீக்கியர்கள் முடிவு செய்தனர். “ போர்க் களத்தில் உயிரைக் கொடுப் பேன், ஆனால் உன்மத்தனே, உன் படையில் சேர மாட்டேன் ” என்று ராஜபுத்திரன் சொல்லிவிட்டான்.
மாவீரன் என்று சரித்திர வல்லுணர்கள் புகழும் ஒளரங்கசீப் தன்னைச் சுற்றிலும் புற்றீசல் போல், கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு மனம் கலங்கினான். படைத் தளபதி தான். சூழ்ச்சியின் சிகரம் போன்றது தான் இராஜ தந்திரம் நிரம்பிய அவன் உள்ளம். இமய முதல் விந்தியம் வரையில் அவன் கொடி பறந்தது உண்மை தான். ஆனால் அவன் உள்ளத்திலிருந்து கிளம்பிய மதவெறி என்னும் கோரப் புயல், மொகலாய சாம்ராஜ்யத்தின் எல்லையில் கம்பீரமாய் பறந்து கொண்டிருந்த பிறைக் கொடியைச் சாய்த்து விட்டது. எவ்வளவோ முயன்றும், வீழ்ந்து விட்ட கொடி மரத்தை ஒளரங்கசீப்பின் படையால் மீண்டும் நிமிர்த்த முடியவில்லை. முகமது பின் காசிம் காலத்தில் கேட்கத் தொடங்கிய அரபியக் குதிரைகளின் குளம்பொலி, இந்திய மண்ணில் ஒளரங்கசீப்பின் காலத்தில் கேட்கவில்லை.
" தக்காணத்திலே வெற்றி, மேவார் ராணாவைக் காணோம். நமது படைகளுக்கு அஞ்சி ஓடி ஒளிந்து விட்டான் போல் தோன்றுகிறது. புரந்தர் கோட்டையைப் பிடித்து விட்டோம், சித்தூர் தரை மட்டமாகி விட்டது. வங்கத்திலே கலகம் செய்தவர்கள் தலை