சி. பி. சிற்றரசு
73
சலுகைகளை நிறுத்தியதால், பாதுஷாவின் தாராள உள்ளத்திடம் எந்த இந்துவும் நம்பிக்கை வைத்து டில்லி நோக்கி வரவேயில்லை.
எதிர்ப்பு தோன்றிய இடங்களிலெல்லாம் ஒளரங்கசீப் தானே படைகளே நடத்திச் சென்றான், பயன் இல்லை. மொகலாய சாம்ராஜ்யம் சரிந்துவிட்டது. மீண்டும் யாராலும், எப்படி முயன்றாலும் தலை நிமிர முடியாது. சரிந்து விட்டது. பாபர் தன் மகன் ஹுமாயூனிடம் சொல்லிய சொற்களை, அக்பர் பின்பற்றினான். அமர் கோட்டை காட்டில் பிறந்த அக்பரின் அன்புச் சொற்களே மொகலாய சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்குப் போதுமானது. ஒளரங்கசீப்பின் வாள் வலிமை, தோள் பலம், படைகளின் எண்ணிக்கை ஆகிய அனைத்தாலும், ஒரு சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
மொகலாய சாம்ராஜ்யம் சரிந்த சாம்ராஜ்யங்களில் ஒன்றாகிவிட்டது. இந்தியாவின் போர்க்களத்திலே பீரங்கி வண்டியை இழுத்து வந்த சாம்ராஜ்யம், தீனே இலாஹி என்ற புதியதோர் தத்துவத்தையும், சீக்கிய மதத்தையும், ஆரிய வர்த்தத்துக்கு அளித்த சாம்ராஜ்யம், அழகு என்ற சொல்லுக்கு இலக்காய், உலக அதிசயங்களில் ஒன்றாய் விளங்கும் தாஜ்மஹாலைக்கொண்ட சாம்ராஜ்யம், பெரு வைரமாம் கோஹினூரை நாதர்ஷாவுக்குச் சொந்தமாக்கிய சாம்ராஜ்யம், மொகலாய கலாச்சாரம் என்ற புதியதோர் கலாச்சாரத்தை இந்திய மண்ணில் தோற்றுவித்த சாம்ராஜ்யம், சரிந்துபோய் விட்டது. சரித்திரம் என்ற கடல் தன் அலைகளில் ஒன்றாக மொகலாய சாம்ராஜ்யத்தையும் சேர்த்து அணைத்துக் கொண்டது. " இந்தியாவில் இடைக்காலத்தில்