பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 1:

  • சான்றோர் பிழையைத்தான்் வெறுப்பர், பிழை செய்த வனை வெறுக்கமாட்டார். ႕
  • பகைவர்களைத் தூய்மையால் வெல்லவேண்டும். தீய வர்களுடன் நட்புக்கொள்ளலாகாது. gff
  • துவேசம் கொள்பவன் இரத்தம் சிந்துபவனுக்கு இணையாவான். ○T
  • துவேசம் துவேசத்தை எழுப்பும், ஆனால் அன்பு தவறுகளை யெல்லாம் மறைத்து விடும். GT
  • பகைவன் பசியாயிருப்பின் உணவு கொடு, தாக மாயிருப்பின் நீர் கொடு. இதுவே அவனை ஒறுக்கும் வழி. Tெ * பகைவன் வீழ்ந்தால் மகிழாதே. அவன் எனக்குச் செய்தது போல் நான் அவனுக்குச் செய்வேன் என்று எண்ணாதே. Gf * பகைவனுடன் போர் புரிவதற்காக அவனை நெருங் கியதும், சமாதான்ம் செய்து கொள்வதாகக் கூறு. எ
  • பகைவரையும் நேசி, உன்னை வெறுப்பவர்க்கும் நன்மை செய். உன்னைச் சபிப்பவரையும் வாழ்த்து, உனக்குத் தீமை செய்வோர்க்கும் பிரார்த்தனை செய்.
  • உண்ணாவிரதம், தான்ம், ஜபம் ஆகியவற்றைவிட உயர்ந்த காரியமொன்று கூறட்டுமா? ஒருவரோ டொருவர் சமாதான்மாயிருத்தலே. பகைமையும் துவேசமும் நன்மையை வேரோடு சாய்த்துவிடும். கி
  • நன்மை செய்தால் நன்மை செய்வேன்; தீமை செய்தால் தீமை செய்வ்ேன் என்று கூறற்க. நன்மை செய்தால் நன்மை செய்யவும், தீமை செய்தால் தீமை செய்யாதிருக்கவும் உறுதி செய்து கொள்க. இ