பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

சர்வ சமயச் சிந்தனைகள்

தீமை செய்ததற்கு வருந்தும் இதயமே இறைவனுக்கு அளிக்கும் பலியாகும். சுழிவிரக்கம் கொள்ளும் இதயத் தைக் கடவுள் வெறுக்கமாட்டார். GT

சிறிதேனும் வழுவாமல் செய்துவரும் அறமே ஆண்ட வனுக்குப் பிரியமான நற்செயலாகும். இ

மீன்போல் நீரில் மூழ்குவதால் கடவுளை அடைய இயலுமோ? த்வளைபோல் இரவு பகலாகக் கத்து வதால் இறைவனைக் காண முடியுமோ?

வீட்டிலேயே, குடும்பத்திலேயே இருந்துகொண்டே கடவுளிடத்தில் ஆழ்ந்துபோக முடியும்.

வறுமை கிழிந்த உடை வறுமையைக் குறிக்குமே யன்றி மன வேதனையைக் குறிக்காது. தா எல்லோரும் இறப்பது சகஜம், அறிஞர் வறுமை யுறுவது சகஜம். தா வயிற்றின் கொடுமை தாங்காமல்.வஞ்சகம் செய்வோர் பலர். ஆம் வயிறு என்று ஒன்று இல்லாவிட்டால் எவர் வறிஞர்? எவர் செல்வர்? கி

வாய்மை

கடவுள் உண்மையானவற்றைக் காப்பார், பொய்யான வற்றை அழிப்பார். உலகத்தைத் தாங்கி நிற்கும் அடி நிலை உண்மையே. உண்மை உரைப்பவனுட்ைய உயிராற்றல் பெருகும், நாளுக்கு நாள் அவன் நல்ல வனாவான். - இருக்வேதம்

கடவுளே உண்மை, கடவுளை அறிவதே மனிதனுக்கு நன்மை தருவதாகும்.