பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 27

அறம் இது வென்று அறிந்து அதைச் செய்யாதிருப்பது கோழைத்தனமாகும். தி

அறமே உயிரினும் உயர்ந்து. கி

கோவிலில் போய் மூன்றுநாள் உண்ணாவிரதமிருப் பதினும் சாலச் சிறந்தது ஒர் அறச்செயல். கி

ஆன்மாவுக்கு வண்மை நன்று, மக்களுக்கு உண்மை நன்று, அறநெறி நின்று தீமையை ஒழிப்பதற்குத் திருப்தி நன்று. 8gт

நற்செயல்களைச் சேகரம் செய்க, அவையே விமோ சனம் அளிக்கும். உலகில் தோன்றுவன அனைத்தும் அழியும். அழியாமல் நிற்பன ஒழுக்கமும் பிறர்க்கு உதவுவதுமே யாகும். ஜா

மனிதன் செய்யவேண்டிய தலையாய அறங்கள் மூன்று: பகைவனை நண்பனுகச் செய்தல்; தீயொழுக்க முடையவனை நல்லொழுக்க முடையவனுகச் செய் தல், அறிவில்லாதவனை அறிவுடைவகைச் செய்தல்.

Ɛgir

கடவுள் கூறுகிறார்: நான் விண்மீன்கள், திங்கள், ஞாயிறு, விலங்குகள் அனைத்தும் படைத்தேன். ஆனால் இவை எல்லாவற்றிலும் சாலச் சிறந்ததாக சன்மார்க்க நெறியில் நிற்கும் மனிதனைப் படைத்

தேன். Ɛgir உலகத்தில் மனிதன் ஆசைப்படக் கூடிய ஒன்று உளது. அதுவே அறம். Ɛgir

அறவாழ்வு என்பது யாது? உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்கள், வாக்கில் இனிய மொழிகள்,மெய்யில் நல்ல செயல்கள் உடைமையே யாகும். 8ՁՈ՝