பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

.

சர்வ சமயச் சிந்தனைகள்

உண்மையின் நண்பராய், அறநெறியில் நிற்க ஆசைப் படுவோர் அனைவரும் கேளுங்கள்:

புனிதன் மதத்தை விரும்பினால் பொய்யையும் கோபத் தையும் இம்சையையும் விட்டு ஒழியுங்கள். பகை யையும் துவேடத்தையும் அகற்றுங்கள், அத்தகைய நல்லோர் ஆண்டவன் சந்நிதி அடைவர். &gт கடவுளை அஞ்சி நடக்கும் வழியைக் காட்டுகிறேன், வாருங்கள். தீயன பேசாதே, பொய் கூறாதே, தி நெறி விட்டு விலகு, நன்மை செய், அமைதியைத் தேடு, அனைவர்க்கும் அதைச் செய். 6T

அற நெறியில் நிற்பவர் ஆண்டவன் தேவ தூதரினும் பெரியோராவர். 6.Τ

அறவோர் இறப்பதில்லை. 67 உனக்கு விரும்பாததைப் பிறர்க்குச் செய்யாதே - இதுவே அனைத்தறன், மற்றவை எல்லாம் அதன் விரிவுரையே. * 6T அறம் செய்பவர் துன்பமுறுவதும், அல்லாதவர் இன்ப முறுவதும் யாராலும் அறிய முடியாதவை. GT அறவோனை அறவோன் என்பதற்காக வரவேற்பவன் அறவோனுக்குரிய அருளைப் பெறுவான். கடவுள் மக்களுள் வேற்றுமை பாராட்டுவதில்லை எவராயினும் தம்மை அஞ்சி அறநெறி நிற்போர் அனை வரையும் அவர் தம் அடியாராக ஏற்றுக் கொள்வர். கி அறத்துக்காகத் துன்புற நேர்ந்தால் நீங்கள் இன்ப வாழ்வு பெற்றவரே. - கி கடவுள் அறவாணன். அறம் செய்வோர் அனைவரும் அவனுடைய குழந்தைகளே. பரசுபரம் பளுவைத் தாங்கி உதவி செய்து கொள்ளுங் கள். இதுதான்் கட்டளையை நிறைவேற்றுவதாகும். கி