பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 43

வெற்றி பகைமையை விளைக்கும், வெல்லப்ப்ட்டவர் துன்புறுவதால், வெற்றி தோல்வி இரண்டையும் கருதா தவர் திருப்தியுறுவர், இன்பம் அடைவர். பெள தான்ம், சீலம், நட்பு இம் மூன்றும் நாடுபவர் இன்ப உலகம் சேர்வர். பெள தோடார் இலங்கு மலர் கோதி வண்டு

வரிபாட நீடு துணர்சேர் வாடாத போதி நெறி நீழல் மேய

வரதன் பயந்த அறநூல் கோடாத சில விதமேவி வாய்மை

குணனாக நாளும் முயல்வார் விடாத இன்ப நெறி சேர்வர், துன்ப

விணைசேர்தல் நாளும் இலரே. பெள நூல்விளைந் தனைய நுண்சொல்

புலவரோடு அறத்தை ஒம்பின் மேல் விளையாத இன்பம்

வேந்த! மற்றில்லை கண்டாய்! பெள

அறிவினால் பெரிய நீரார்

அருவினை கழிய நின்ற நெறியினைக் குறுகி இன்பம்

நிறைகடல் அகத்து நின்றார்; பொறியெனும் பெயரவை வாய்ப் பொங்கழல் அரவின் கண்ணே வெறிபுலங் கன்றி நின்றார்

வேதனைக் கடலுள் நின்றார். - சிந்தாமணி

தன்னைக் கொண்டு தன்னை வெல்பவனே இன்பம் அடைவான்.

தன்னை அடக்குவது கடினம், ஆனால் தன்னை அடக்

காதவர் இன்பம் காணமுடியாது.