பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

சர்வ சமயச் சிந்தனைகள்

நீ நலம் பெறாவிட்டாலும் பிறர் நலம் கண்டு மகிழ் வாய், சான்றோர் பிறர் இன்பம் பெறக் கண்டு தாங் களும் மகிழ்வர். இன்பம் வேண்டியதே, அது ஆன் மாவின் லட்சணமே, அறமே அதைத் தருவதாகும்.

- மகாபாரதம்

அறநெறி அடைந்துவிட்டாய், பகைமையை ஒழித்து விட்டாய், இன்பத்தைக் கண்டுவிட்டாய். - வேதம்

மக்களுக்குத் துன்பம் உண்டாவது மறத்தாலேயே மக்கள் அழியாத இன்பம் பெறுவது அறத்தாலேயே.

- பகவத்கீதை

எவன் எல்லாப் பிராணிகளையும் சமமாக எண்ணு கிறானோ, எவன் எதனிடத்திலும் தீமை எண்ணா திருக்கிறானோ அவனே இன்பத்தைக் காண்பவன்.

- விட்ணு புராணம் இன்பம் இடையறா தீண்டும், அவாவெனும் துன்பத்துள் துன்பம் கெடின். திருவள்ளுவர் அறத்தான்் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழு மில.

திருவள்ளுவர் இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின். திருவள்ளுவர்

அறநெறி நிற்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைவான், அவன் தான்் செய்த நன்மையை நினைந்து இன்புறுவான் செய்யப் போகும் நன்மை யை நினைந்து அதனிலும் அதிகமாக இன்புறுவான்.

பெள

நம்மை வெறுப்பவரையும் வெறுக்காமலிருப்பதால் விளையும் இன்பமே! நீ என்றும் வாழ்க. பெள