பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 45

தன்னைப்பற்றிய எண்ணத்தை நீத்துவிட்டு எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து வாழ்ந்தால் எப் பொழுதும் இன்பமே. می இன்பமும் துன்பமும் இதயத்திலேயே முளைப்பன, உலகம் என்பது நாம் ஆக்குவது போலவே ஆகும். சி

அறம் உள்ள இடத்திலேயே இன்பம் உறையும். சி

அஹரை மஜ்தா வகுத்துள்ள அறநெறியில் நிற்பவரே அழியாத இன்பம் பெறுவார். 33ss

எல்லா நலங்களினும் ஒழுக்கமே உயர்ந்தது, அதுவே இன்பம் தருவது. ஜா

மக்களே நான் கூறுவதைக் கேளுங்கள், பொய்யாகிய சாத்தான்் உங்கள் வாழ்வின் சாரதியாக உள்ளவரை நீங்கள் இன்பத்தைக் காணவே மாட்டீர்கள் பிறர்க்குத் தீமை செய்து பெறும் இன்பம் இன்பமன்று, நெஞ்சே! அறவோர்க்கு அழிவு தேடுவோர் ஆன்மாவை அழித்துக் கொள்பவரே. - ஜா

பிறர்க்கு இன்பம் உண்டாகுமாறு உழைப்பவரே இன்பம் காண்பவர். கடவுளே அவர்களுக்கு ஆற்ற லும் உடல் நலமும் அருள்வீராக. S3T

பொறுமையோடு உள்ளவரை இன்பமாக வாழ்பவர் என்று கூறுவோம். கி

கடவுள் ஒவ்வொருவனுக்கும் அவன் செய்யும் செயல்களுக்கு ஏற்றவாறு பலன் அருள்வார். கி

கடவுளை நம்புங்கள், அவருடவன் ஐக்கியமாக

ஆசைப்படுங்கள், அவர் காட்டும் நெறியில் நில்லுங் கள், ஆனந்தம் அடைவீர்கள். கி