பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sia siouë stëgsosissir எனக்குக் கடவுளைப் போன்ற நண்பரிலர். எனக்கு நீரே உடலையும் ஆன்மாவையும் அருளினர், அறி வைத் தந்தீர், அனைவரையும் காப்பவர் நீரே.

கருணையங்கடலே! என்றும் என் இதயத்துள் உறை வாய். அதைக்கொண்டு நான் உன்னிடம் அன்பு கொள்வேன். கி

கடவுள் தரிசனம்

கடவுளிடம் பக்தி செய்ய வேண்டும் என்று ஆசை கொள், அந்த பக்தியை அன்பிருந்தால் பெறமுடியும், அறிவாலும் ஆராய்ச்சியாலும் பெற முடியாது.

மெய்யன்பர் மனத்தன்பின் விளைந்தஇசைக்

குழலோசை வையந்தன்னையும்நிறைந்து வானம்தன் வயமாக்கிப் பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவில்

நடம்புரியும் w ஐயன்தன் திருச்செவியின் அருகணையப்

பெருகியதால். -சேக்கிழார்

உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும்

தறிநிறுவி உறுதி யாகத் தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி

இடைப்படுத்தித் தறகடபாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்

களித்துண்டு கருணை என்னும் வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைத்துவரு வினைகள் தீர்ப்பாம்.

-பரஞ்சோதி முனிவர் நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே விடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்

- விரைகின்றேன்